சென்னை: ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், மேம்பாட்டு பணிகள் தாமதமின்றி நிறைவேற்றப்பட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நிதியுதவி, வேலைவாய்ப்பு, கருணை அடிப்படையிலான பணி நியமனம் கல்வி உதவித் தொகை ஆகியவை எவ்வித தாமதமின்றி வழங்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியின நலப் பள்ளி, கல்லூரி விடுதிகளை சிறந்த முறையில் பராமரிக்கவும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
