மேற்கு தாம்பரம் அருகே முடிச்சூரில் ஸ்நூசி என்ற செல்ல நாய் அது வசிக்கும் தெருவில் மிகவும் பிரபலமானது. இதை ஒரு குடும்பத்தினர் அதிக பாசத்துடன் வளர்த்து வந்துள்ளனர். அந்த நாயை வளர்த்து வந்த ஷமீம் என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
அவர் வீட்டை விட்டு வெளியில் செல்லும் பொழுது வீட்டில் இரண்டாவது மாடியில் நாயை விட்டு விட்டு சென்றுள்ளார். சம்பவ தினத்தில் அதுபோல விட்டுவிட்டு வீட்டிற்கு வந்தபோது வீட்டின் இரும்பு கேட் கம்பியில் குத்தியபடி உயிருக்கு நாய் போராடிக் கொண்டிருந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இரும்பு கம்பியை அறுத்து நாயை மீட்டனர்.
பின் அடையார் தனியார் கால்நடை மருத்துவமனையில் அந்த நாயை சேர்த்த நிலையில் அதற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது, நாய் ஸ்னூசி உயிருக்கு ஆபத்தான கட்டத்தை தாங்கி தாண்டி நலமாக உள்ளது. தான் வேலைக்கு செல்வதாகவும், எனவே இந்த நாயை கவனிக்க முடியவில்லை என்றும் இதை பராமரிக்க விரும்புவார்கள் வாங்கிக் கொள்ளலாம் என்றும் சமயம் கூறியுள்ளார்.
ஏற்கனவே ஸ்னூசியின் தாய் நாய் ஏழு மாதங்களுக்கு முன்பு நான்கு குட்டிகளை ஈன்ற.து அந்த நாய் குழந்தை பிறந்த போது இறந்துள்ளது. இதனால், பரிதாபப்பட்ட தெரு மக்கள் நான்கு குட்டிகளையும் பராமரித்து வந்தனர். அதில் மூன்று நாய்க்குட்டிகள் பல்வேறு காரணங்களால் இறந்து போன நிலையில் ஸ்நூசி மட்டும் தான் உயர் பிழைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.