சென்னை: பாஜக பட்டியலின பிரிவு மாநிலப் பொதுச்செயலாளர் என்.விநாயகமூர்த்தி, அக்கட்சியில் இருந்து விலகி இன்று திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து திமுகவில் இணைந்தார். அவருடன் ஈரோடு நிர்வாகிகளும் இணைந்தனர். ஈரோடு இடைத்தேர்தலை முன்னிட்டு இந்த அரங்கேற்றம் நடைபெற்றுள்ளது. தமிழக பாஜகவின் பட்டியலின பிரிவு மாநில பொதுச்செயலாளராக இருந்து வருபவர் என்.விநாயகமூர்த்தி. இவர் சமீப நாட்களாக கட்சி மீது அதிருப்தியில் இருந்த நிலையில், இன்று அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருடன், […]
