கடலுார் : கடலுார் லாரன்ஸ் ரோட்டில் புதிய ஏ.எஸ்.கே., தங்க மாளிகை நகைக்கடை திறக்கப்பட்டது.
புதுச்சேரி, திருச்சி, மதுரை ஆகிய ஊர்களில் மக்களின் ஆதரவோடு தங்க நகைகள், வெள்ளி நகைகள் எப்போதும் முற்றிலும் சேதாரம் இல்லாமல், மிக குறைந்த செய்கூலியில், 916 ஹால்மார்க் நகைகள் விற்பனை செய்து வருகின்றனர் ஏ.எஸ்.கே., தங்க மாளிகை நிறுவனத்தினர்.கடலுார் திருப்பாதிரிபுலியூர் லாரன்ஸ் ரோட்டில் ஏ.எஸ்.கே., தங்க மாளிகை திறக்கப்பட்டது. கயிலை ஆறுமுகம் தலைமை தாங்கி கடையை திறந்து வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தார். கடை நிர்வாகி செல்வகுமரன், தேவி செல்வகுமரன் முன்னிலை வகித்தனர்.
விழாவில் அனைத்து நகைக்கடை உரிமையாளர்கள், வாடிக்கையாளர்கள், நண்பர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கடை உரிமையாளர்கள் கூறுகையில், கடலுாரில் வாடிக்கையாளர்களுக்கு எந்த ஒரு கவர்ச்சிகரமான அன்பளிப்போ, விளம்பரமோ இல்லாமல், குறைந்த லாபத்துடன் தங்கம், வெள்ளி நகைகள் விற்பனை செய்ய வேண்டும் என்கிற நோக்கோடு இங்கு கடை திறக்கப்பட்டுள்ளது.
இன்றைய நாகரிகத்திற்கு ஏற்றவாறு, அனைத்து டிசைன்களிலும் சிறியது முதல் பெரிய நகைகள் வரை விற்பனை செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்கள் திருப்தியே எங்கள் குறிக்கோள் என்ற நோக்கத்துடன் விற்பனை செய்கிறோம்.
மேலும், சவரனுக்கு ரூ. 3 ஆயிரம் வரையில் சேமிப்பு, சிறப்பு அம்சமாக ரூ.1000 முதல் ரூ. 50,000 வரை நகை சேமிப்பு திட்டத்தி்ல் சேரலாம், சேரும்போது சிறப்பு பரிசு வழங்கப்படுகிறது. திட்ட முடிவில் செய்கூலி மற்றும் சேதாரம் இல்லாமல், நகை எடுத்துக்கொள்ளலாம்
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
விழாவிற்கு வந்தவர்களை உரிமையாளர் செல்வமுருகன், செல்வ சிவகுரு வரவேற்று, நன்றி கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement