டாஸ்மாக் கடையை அகற்றாத திமுகவினருக்கு எதிராக பொங்கிய மக்கள்..!!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் திமுகவில் உள்ள பெரும்பாலான அமைச்சர்கள் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்காளர் பட்டியலை சரி பார்க்க சென்ற திமுகவினருக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட கே.என்.கே சாலையில் உள்ள குடியிருப்புகளில் வாக்காளர் பட்டியலை சரி பார்க்க சென்ற திமுக நிர்வாகிகளை சூழ்ந்து கொண்ட அப்பகுதி மக்கள் கடந்த ஒரு வருடமாக இப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் தங்கள் பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக கவுன்சிலரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். எனவே தங்களிடம் திமுகவினர் யாரும் ஓட்டு கேட்டு வர வேண்டாம் என கூறி அதிருப்தியை வெளிப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழக மக்களின் சரியான நேரத்தில் சரியான கேள்வி. எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் சரி.. கேள்விகள் நமது உரிமை. pic.twitter.com/gfe6t6naml
— Gayathri Raguramm 🇮🇳 (@Gayatri_Raguram) February 6, 2023