பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் உள்ள, சூப்பர்மார்க்கெட் ஒன்றில் பொது மக்களை, கத்தியை மிரட்டிய வாலிபரை, போலீசார் நையபுடைத்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கர்நாடக மாநிலம், கல்புகாரியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில், நேற்று இரவு, கருப்பு நிற பனியன் மற்றும் பேன்ட் அணிந்து, கையில் கத்தியுடன், வரும் வாலிபர் ஒருவர், பொது மக்களை மிரட்டி கொண்டிருந்தார். போலீசார், வாலிபரை பிடிக்க முயற்சி செய்தனர். அவரை பிடிக்க முடியவில்லை. வாலிபரின் காலை நோக்கி, போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். காயமடைந்த வாலிபர் கீழே விழுந்ததும், போலீசார் அவரை, சூழ்ந்து கொண்டு, லத்தியால் சரமாரியாக தாக்கினர். இது குறித்த, வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
போலீசார் விசாரணையில், பிடிபட்ட வாலிபர் அதே பகுதியைச் சேர்ந்த ஜாபர் என, தெரிந்தது. அவர், சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கல்புகாரி போலீஸ் கமிஷனர் சேத்தன் கூறுகையில்,’சூப்பர் மார்க்கெட்டில் கத்தியை காட்டி, பொது மக்களை மிரட்டிய வாலிபரை, போலீசார் பிடிக்க முயன்றனர். போலீசாரை அந்த வாலிபர், தாக்கியதால் வேறு வழியின்றி, பதிலுக்கு தாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது,’ என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement