சிலியில் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளது.
சிலியில் அதிக வெப்பநிலை காரணமாக வெப்பக்காற்று வீசுவதால், காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, 14 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவு காடு தீயில் கருகியதாக கூறப்படுகிறது.
தீ விபத்தில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் 14ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான நிலங்கள் தீயில் கருகி சேதம் அடைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.