துருக்கியில் மிகப்பெரும் பூகம்பம்… 7.8 ரிக்டர் அளவாக பதிவு – 15 பேர் உயிரிழப்பு

Turkey Earthquake: துருக்கி நாட்டில் மிகப்பெரிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காஸியன்டெப் நகருக்கு அருகே இன்று இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி, 15 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் இன்னும் வெளியிடப்படுவில்லை. 

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் 7.8 அளவில் ரிக்டர் அளவுகோளில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கும், துருக்கி நேரப்படி இன்று அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 17.9 கி.மீ., அளவில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | வங்க தேசத்தில் தாக்கப்பட்ட இந்துக் கோயில்கள்; இந்துக்கள் மத்தியில் பீதி!

முதலில் நிலநடுக்கம் உணரப்பட்டு அடுத்த 15 நிமிடங்களில், 6.7 என்ற ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  துருக்கியின் முக்கிய தொழில்துறை மற்றும் உற்பத்தி மையங்களில் ஒன்றான காஸியான்டெப் நகரின் தெற்குப் பகுதி, சிரியாவின் எல்லையாக உள்ளது. லெபனான், சிரியா மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகளில் இந்த நடுக்கம் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.  பல்வேறு கட்டங்கள் இடிந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. 

துருக்கி உலகின் மிகவும் தீவிரமான பூகம்ப மண்டலங்களில் ஒன்றாகும். 1999இல் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் டஸ்ஸும் ஒன்றாகும். துருக்கியைத் தாக்கிய மிக மோசமான நிலநடுக்கம்.

அந்த நிலநடுக்கத்தில் இஸ்தான்புல்லில் சுமார் 1,000 பேர் உட்பட 17 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். ஒரு பெரிய நிலநடுக்கம் இஸ்தான்புல்லை அழிக்கக்கூடும் என்று நிபுணர்கள் நீண்ட காலமாக எச்சரித்து வருகின்றனர். மேலும், அங்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் இல்லாமல் பரந்த கட்டடத்தை அனுமதித்துள்ளது.

ஜனவரி 2020இல் எலாசிக் நகரில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. 40 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அந்த ஆண்டு அக்டோபரில், ஏஜியன் கடலில் 7.0 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில், 114 பேர் கொல்லப்பட்டனர். 1,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மேலும் படிக்க | Pervez Musharraf: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் காலமானார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.