விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புதூரில் விசைத்தறி தொழிலாளர்கள் 8வது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விசைத்தறி தொழிலாளர்களின் கூலி உயர்வு, போனஸ் உயர்வு உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜனவரி 30 ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விருதுநகர் தொழிலாளர் நலத்துறை அலுவலகம் மற்றும் ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம், தொழிலாளர்கள் சங்கம், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் இடையான ஊதிய உயர்வு முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று ரத்தானது.
இதனைத் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தின் 8வது நாளான இன்று செட்டியார்பட்டி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு ஏஐடியூசி, சிஐடியுசி விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.