25 ஆண்டுகளுக்கு முன் கிடைத்த மனித மண்டை ஓடு! 47 ஆண்டுகளுக்கு பின் விலகிய மர்மம்


அலாஸ்காவில் 25 ஆண்டுகளுக்கு முன் கிடைத்த மனித மண்டை ஓடு, 1976ஆம் ஆண்டு காணாமல் போன நபருடையது என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மாயமான நபர்

அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த கேரி ஃபிராங்க் சோதெர்டன், 70களின் மையப்பகுதியில் ஆர்டிக் வட்டத்திற்கு பயணம் மேற்கொண்டார்.

தனது நண்பர் ஒருவருடன் சென்ற அவர், தனித்தனியாக தண்ணீர் உறையும் வரை நதியைச் சுற்றி எதிரெதிர் பக்கங்களில் நடக்க திட்டமிட்டுள்ளார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் தன் நண்பரை மீண்டும் சந்திக்கவில்லை.

1976ஆம் ஆண்டு அவர் காணாமல் போயிருக்கிறார்.

இதனை அவரது சகோதரர் ஸ்டீபன் ஊடகத்திடம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தேடுதல் குழு ஒன்று கேரியை தீவிரமாக தேடியது.

25 ஆண்டுகளுக்கு முன் கிடைத்த மனித மண்டை ஓடு! 47 ஆண்டுகளுக்கு பின் விலகிய மர்மம் | Us Missing Man Skull Match 47 Years Mystery

மண்டை ஓடு கண்டுபிடிப்பு

எனினும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் தான் 1997ஆம் ஆண்டு மனித மண்டை ஓடு அப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை ஆராய்ச்சி செய்த அந்த நேரத்தில் நிபுணர்களால் டிஎன்ஏ-வை பிரித்தெடுக்க முடியவில்லை.

இந்த வழக்கு மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், கடந்த டிசம்பர் மாதம் கேரியின் சகோதரரின் டிஎன்ஏவுடன் ஒப்பிட்டப்பட்டது.

ஆனாலும் இறுதி முடிவு கிடைக்க ஒரு வருடம் ஆகலாம் என்று புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கரடி தாக்கியதால் கேரி இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

25 ஆண்டுகளுக்கு முன் கிடைத்த மனித மண்டை ஓடு! 47 ஆண்டுகளுக்கு பின் விலகிய மர்மம் | Us Missing Man Skull Match 47 Years Mystery

குடும்ப கல்லறை

இதற்கிடையில், கேரி இறந்துவிட்டதாக கருதும் அவரது சகோதரர் மற்றும் குடும்பத்தினர், அவரை கவுரவிக்கும் வகையில் தங்கள் குடும்ப கல்லறையில் ஒன்றை சேர்ந்தனர்.

அதில் 1970களில் அலாஸ்காவில் தொலைந்து போனது என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், கேரியின் எச்சங்கள் ஓரளவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், வசந்த காலத்தின் பிற்பகுதியில் அவருக்கு நினைவுச்சின்னம் அமைக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக ஸ்டீபன் கூறியுள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.