தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது சின்னத்திரை நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் மகாலட்சுமி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் குறித்து பேச்சுக்கள் தான் சோஷியல் மீடியாவில் ஹாட் டாபிக்காக இருந்தது.
சமூக வலைத்தளத்தில் பிரபலமாக இருக்கும் மகாலட்சுமி கடந்த வருடம் செப்டம்பர் மாதம் இரண்டாம் திருமணம் செய்தார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய மகாலட்சுமிக்கு, ஏற்கனவே திருமணம் முடிந்து ஒரு மகன் இருக்கிறார். அவரின் திடீர் திருமணம் குறித்து இணையத்தில் பல விமர்சனங்களும், கருத்துகளும் வலம் வந்து கொண்டிருந்தன.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
லிப்ரா ப்ரொடக்ஷன் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை திருமணம் செய்தார் மகாலட்சுமி. திருமணத்திற்கு பின்னர் இந்த தம்பதியினர் ஜோடியாக யூடிப் சேனல்களுக்கு பேட்டியளித்து வந்தனர். மேலும், திருமணத்துக்கு பிறகு தங்களின் சோஷியல் மீடியா பக்கங்களில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.
Jailer: அடேங்கப்பா.. மாஸ் நடிகரை களமிறக்கிய நெல்சன்: இந்த ட்விஸ்ட்டை எதிர்பார்க்கலயே.!
சமூக வலைத்தளங்களில் தங்களுக்கு வரும் நெகட்டிவ் விமர்சனங்கள் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர் இந்த ஜோடிகள். இந்நிலையில் நேற்று தைப்பூச திருநாளை முன்னிட்டு ரவீந்திரன் – மகாலட்சுமி ஜோடி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும் கோவிலின் முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் ரவீந்திரன்.
Vaathi, Dhanush: சாதியை தூக்கி எறிந்த தனுஷ் பட நடிகை: குவியும் பாராட்டு.!
இந்த பதிவிற்கு கேப்ஷனாக, ’தாங்கள் நேசிக்கும் உறவுகளுக்காக மட்டுமின்றி தங்களை நேசிக்கும் உறவுகளுக்காகவும் முருகனிடம் வேண்டிக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பதிவிற்கு ஹார்ட் ஸ்மைலியை கமெண்ட் செய்துள்ளார் மகாலட்சுமி. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
View this post on Instagram A post shared by Ravindar Chandrasekaran (@ravindarchandrasekaran)