விழுப்புரம் மாவட்டத்தில் செல்போனில் ஆபாசபடத்தை காட்டி 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த லாரி ஓட்டுநரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வெள்ளக்குளம் பகுதியை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் மணிகண்டன் (29). இவர் சம்பவத்தன்று 16 வயதுடைய பதினோராம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தைகள் கூறி அப்பகுதியில் உள்ள முள்தோப்பு பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்பு சிறுமியிடம் செல்போனில் ஆபாச படங்களை காண்பித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சிறுமி தாயிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் மணிகண்டனை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.