சென்னை மாநகராட்சி பகுதியில் அனுமதி பெறாமல் கொடுக்கப்பட்ட கழிவு நீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகள், நிறுவனங்கள் ஆகியவற்றில் இருந்து வெளியேறும் சுமார் 1,813 கழிவு நீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனுமதி பெறாமல் இணைப்பு கொடுத்ததற்காக ரூ.5.98 லட்சம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை அதன் புறநகர் பகுதிகளை உள்ளடக்கி நாளுக்கு நாள் விரிவடைந்து வரும் நிலையில் அதன் குடியிருப்புகளும் அதிகரித்து வருகிறது. மழைநீர் வடிகால், கழிவு நீர் கால்வாய், குடிநீர் […]
