சென்னை: திமுகவின் பி-டீமாக இருந்து வரும் பன்னீர்செல்வம் ஈபிஎஸ் ஐ சந்திக்க 100 சதவீதம் வாய்ப்பு இல்லை” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். ஈரோடு இடைத்தேர்தல் விவகாரத்தில், உச்சநீதிமன்ற உத்தரவைத்தொடர்ந்து, பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக இபிஎஸ் அறிவித்த வேட்பாளர் தென்னரசு களமிறங்கி உள்ளார். அவருக்கு ஆதரவு கேட்ட எடப்பாடி ஆதரவாளர்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஓபிஎஸ் தரப்பும் ஆதரவு தரும் என கூறிய நிலையில், வேட்பாளர் பெயரை கூறாமல் […]
