துருக்கி-சிரியா எல்லையில் நேற்று அதிகாலை 7.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவின் எல்லையில் அமைந்துள்ள நகரங்களில் பல நூற்றுக்கானக்காண வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின.
இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் இதுவரை 4300க்கும் மேற்பட்டவர்கள் பேர் உயிரிழந்துள்ளனர். 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் இந்தியாவில் இருந்தும் இரண்டு தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில்,
“துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பேரழிவு நிலநடுக்கங்கள் மிகவும் வருத்தமளிக்கிறது. மேலும் இந்த பேரழிவில் பாதிக்கப்பட்டு உயிரை இழந்த, காயமுற்ற மக்களை நினைத்து நான் வேதனைப்படுகிறேன். இந்த துயரமான நேரத்தில் இரண்டு நாட்டு மக்களையும் நினைத்து எனது இதயம் வேதனைக்குள்ளானது என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அனைவரும் ஒன்றிணைவோம்” என்று தெரிவித்துள்ளார்