மும்பை; நடிகர் இம்ரான் கான் நீண்ட காலமாக ஊடக வெளிச்சத்தில் இருந்து விலகி இருக்கிறார். நடிகர் கடைசியாக 2015 இல் கத்தி பட்டி படத்தில் நடித்தார். மும்பையில் நடந்த அமீர் கானின் மகள் ஈரா கானின் நிச்சயதார்த்த விழாவில் அவரை பார்க்க முடிந்தது. இப்போது, தென்னிந்திய நடிகை லேகா வாஷிங்டனுடன் கைகோர்த்து நடக்கும் அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இருவரும் கைகளை பிடித்தபடி கூட்டத்தை கடந்து செல்லும் வீடியோவைப் பார்க்கும்போது, அவர்களின் இணக்கமும் நட்பும் நன்றாகவே வெளிப்படுகிறது. லேகா வாஷிங்டன் அழகாக இருக்கிறார். நடிகர் இம்ரான், கருப்பு டி-ஷர்ட் மற்றும் நீல நிற ஜீன்ஸில் கூலாக மட்டுமல்ல, சூப்பராகவும் காணப்பட்டார். அவர்களிடையே உள்ள கெமிஸ்ட்ரி இணையத்தில் வைரலாவதுடன் பலரது புருவத்தையும் உயர்த்த வழிகோலியிருக்கிறது.
லேகா வாஷிங்டன், தமிழ் மற்றும் தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். இவர் ஆடை வடிவமைப்பாளராகவும் பணிபுரிகிறார். 2002 ஆம் ஆண்டு வாக்கில் எஸ் எஸ் மியுசிக் தொலைக்காட்சியில் ஒளிப்பதிவு தொகுப்பாளராக பணியில் சேர்ந்த லேகா, ஜெயம் கொண்டான், வேதம் உட்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
லேகா வாஷிங்க்டனுடன் தற்போது கிசுகிசுக்கப்படும் இம்ரான் கான், 2020 இல் அவரது முன்னாள் மனைவி, அவந்திகா மாலிக்கிடம் இருந்து சுமுகமாகப் பிரிந்தார். இந்த தம்பதிகளை மீண்டும் இணைக்க நெருங்கிய குடும்பத்தினரும் நண்பர்களும் முயற்சித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவந்திகாவுடனான தனது திருமணத்தை மீண்டும் தொடங்க இம்ரான் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இம்ரானுக்கும் அவந்திகாவுக்கும் இமாரா என்ற 8 வயதில் மகள் உள்ளார்.
முன்னதாக, லேகா வாஷிங்டனுடன் இம்ரானுக்கு இருந்ததாகக் கூறப்படும் தொடர்புதான் அவந்திகாவிடமிருந்து பிரிந்ததற்குக் காரணம் என்று கூறப்பட்டது. இருப்பினும், அந்தத் தகவல்களை யாரும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தவில்லை.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், அவந்திகா மாலிக் மற்றும் சாஹிப் சிங் லம்பா இணைந்து இருக்கும் புகைப்படங்கள் வைரலானது. ஒரு பரஸ்பர நண்பர் மூலம் சந்தித்த பிறகு இருவரும் ஒருவருடன் ஒருவர் பழக ஆரம்பித்தனர். இருப்பினும், அவர்களின் விருப்பம் தொடர்பாக அவர்கள் எதையும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.