வீடு புகுந்து தாக்குவேன் என பிரபல நடிகருக்கு நடிகை கங்கனா ரனாவத் மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேவு பார்க்கிறார்பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை கங்கனா ரனாவத். பாலிவுட் படங்கள் மட்டுமின்றி தமிழ் மற்றும் தெலுங்கு பங்களிலும் நடித்து வருகிறார். ஏராளமான விருதுகளை குவித்துள்ள கங்கனா ரனாவ அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். அரசியலில் தீவிரமாக உள்ள கங்கனா ரனாவத், பாலிவுட் நட்சத்திரங்கள் குறித்து ஏதாவது பேசி ஹெட் லைன்ஸில் இடம் பிடித்து வருகிறார். அந்த வகையில் பிரபல நடிகர் தனது மனைவியை பெரிய நடிகையாக்க தன்னை வேவு பார்த்து வருகிறார் என்று குற்றம்சாட்டினார்.
Kangana Ranaut: பொண்டாட்டிக்காக பிரபல நடிகர் என்னை வேவு பார்க்கிறார்… கங்கனா ரனாவத் பகீர்!
தன்னைப்போன்று தயாரிப்பாளராக்க…தனது அடுக்குமாடி குடியிருப்பு பால்கனி, மொட்டை மாடி என எங்கு சென்றாலும் தன்னை ஜூம் லென்ஸ் போட்டு வேவு பார்ப்பதாக குற்றம்சாட்டினார். தனது மனைவியை தன்னை போன்று முன்னணி நடிகையாக்கவும் தயாரிப்பாளர் ஆக்கவும் அந்த நடிகர் தன்னை வேவு பார்ப்பதாக தெரிவித்தார். கங்கனா ரனாவத் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் இருந்த போதும் womaniser and Casanova Husband என்று குறிப்பிட்டிருப்பதால் அவர் நடிகர் ரன்பீர் கபூரையும் நடிகை ஆலியா பட்டையும் தான் கூறுகிறார் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
Prabhas engagement: பாகுபலிக்கு அடுத்த வாரம் நிச்சயதார்த்தம்… யார் கூட எங்கேனு பாருங்க!
நேற்றிரவு முதல்…கங்கனா ரனாவத்தின் இந்த குற்றச்சாட்டுக்கள் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேலும் ஒரு பதிவை ஷேர் செய்து மிரளவிட்டுள்ளார் நடிகை கங்கனா ரனாவத், அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, என்னைப் பற்றி கவலைப்படுபவர்கள், நேற்றிரவு முதல் என்னைச் சுற்றி சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் எதுவும் இல்லை என்பதை தயவுசெய்து அறிந்து கொள்ளுங்கள். கேமராக்கள் அல்லது கேமராக்கள் இல்லாமல் யாரும் என்னைப் பின்தொடரவில்லை.
வாணி ஜெயராம்… இப்படியும் மரணம் வருமா?
வீடு புகுந்து அடிப்பேன்வார்த்தைகளால் சொல்வதை புரிந்து கொள்ளாதவர்களுக்கு, விஷயங்களைப் புரிய வைக்க வேறு வழி தேவை. சரியாக இருந்து கொள்ளுங்கள் நான் எச்சரிக்கிறேன். இல்லாவிட்டால் நான் உங்கள் வீட்டிற்குள் நுழைந்து உங்களைத் தாக்குவேன், என்னை பைத்தியம் என்று அழைப்பவர்களுக்கு கூட, நான் எந்த அளவிற்கு செல்வேன் என்பது தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது பதிவில் ஒரு வாள் ஈமோஜயையும் குறிப்பிட்டுள்ளார் நடிகை கங்கனா ரனாவத்.
இதுவும் அவங்களுக்குதான்கங்கனா ரனாவத்தின் இந்த பதிவும் கூட ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் தம்பதிக்கானதுதான் என்றும் தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள். கங்கனாவின் இந்த பதிவு தற்போது பெரும் வைரலாகி வருகிறது. கங்கனா ரனாவத் தற்போது எமஜென்ஸி என்ற படத்தில் மறைந்த பிரதமர் இந்திரா காந்தியாக நடிக்கிறார். மேலும் தேஜாஸ் என்ற படத்தில் பைலட்டாக நடிக்கிறார் கங்கனா ரனாவத். தமிழில் நடிகர் ராகவா லாரன்ஸுடன் சந்திரமுகி 2 படத்தில் நடித்து வருகிறார் கங்கனா ரனாவத்.
Kangana Ranaut