Suriya: நம்ம சூர்யா மகள், மகனா இது!: என்னம்மா வளர்ந்துட்டாங்க

சூர்யாவின் மகள் தியா, மகன் தேவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்தவர்கள், அடேங்கப்பா என்னமா வளர்ந்துவிட்டார்கள் என்கிறார்கள்.

சூர்யாகோலிவுட் கொண்டாடும் தம்பதிகளில் ஒன்று சூர்யா-ஜோதிகா ஜோடி. காதலித்து கடந்த 2006ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு தியா என்கிற மகளும், தேவ் என்கிற மகனும் உள்ளனர். பிள்ளைகளை பெரும்பாலும் கேமராவுக்கு முன்பு கொண்டு வராமல் இருக்கிறார்கள். அதனால் தேவ், தியாவின் புகைப்படங்கள் எப்பொழுது வெளியானாலும் சூர்யா ரசிகர்கள் குஷியாகிவிடுவார்கள்.
தியாதியா, தேவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. ஒரு புகைப்படத்தில் தியா க்யூட்டாக சிரித்தபடி போஸ் கொடுத்திருக்கிறார். இன்னொரு புகைப்படத்தில் அக்காவும், தம்பியும் ஜோதிகா மற்றும் அவர்களின் செல்ல நாயுடன் அமர்ந்திருக்கிறார்கள். வீட்டில் எடுத்த புகைப்படம் போன்று தெரிகிறது. அதை பார்த்த சூர்யா, ஜோதிகா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மகிழ்ச்சிதியா, தேவின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது, அடேங்கப்பா தியா பாப்பா எவ்வளவு வேகமாக வளர்ந்துவிட்டார். தேவ் அதை விட வேகமாக வளர்ந்திருக்கிறார். இரண்டு பேருமே அச்சு அசலாக அப்பா சூர்யா மாதிரியே இருக்கிறார்கள். இரண்டு செல்லங்களும் நன்றாக இருக்க வேண்டும். அவர்களுக்கு பிடித்த துறையை தேர்வு செய்து சந்தோஷமாக வாழ வேண்டும் என மனதார வாழ்த்தியுள்ளனர்.

விமர்சனம்சில விஷமிகளோ, தியா, தேவின் பெயரை வைத்து அவர் ஒரு சின்னப் பெண் என்றும் கூட பார்க்காமல் அசிங்கமாக கிண்டல் செய்கிறார்கள். பிள்ளைகளுக்கு பார்த்து பார்த்து தான் பெயர் வைத்திருக்கிறார்கள் சூர்யாவும், ஜோதிகாவும். அப்படி இருந்தும் தியா ஒரு சின்ன குழந்தை என்பதை மறந்து அவரின் பெயரை வைத்து கேவலமாக பேசுகிறார்கள். இதை பார்த்த சூர்யா ரசிகர்கள் கோபம் அடைந்து பதிலடி கொடுத்துள்ளனர்.
சூர்யா 42Varisu, Vijay: வடை, வடை, ரூ. 300 கோடி வடை: வாரிசு வசூலை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்கெரியரை பொறுத்தவரை சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது. சூர்யா 42 படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரேயஷன்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். படத்தில் சூர்யா ஏகப்பட்ட கதாபாத்திரத்தில் வந்து ரசிகர்களை திக்குமுக்காட வைக்கப் போகிறாராம்.

கெரியர்சூர்யா 42 படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கு குறைவிருக்காதாம். படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் சூசகமாக தெரிவித்துள்ளது. இரண்டு பாகங்களாக வெளியாகும் சூர்யா 42 படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். சூர்யா 42 தவிர்த்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கிறார் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.

​Dhanush:எதிர்பார்த்தது போன்றே மீண்டும் ‘அவருடன்’ சேரும் தனுஷ்: ரசிகர்கள் செம ஹேப்பி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.