அட்டகத்தி சீமான்.. அடி மட்டத்தில் வெடிக்கும் விசிக – நாதக மோதல்..!

நாம் தமிழர்
கட்சிக்கும்,
விடுதலை சிறுத்தைகள்
கட்சிக்கும் சில நாட்களாகவே கருத்து மோதல் இருந்து வருகிறது. சீமானிடம் திருமாவளவனை குறித்தும், திருமாவளவனிடம் சீமானை குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, அவர்கள் எதையாவது விமர்சிக்க இப்படியே இரு தரப்பிலும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

இந்த நிலையில், பழனியில் கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தைப்பூசத் திருவிழா தொடங்கியது. பத்துநாட்கள் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள்‌ பாதயாத்திரையாக வந்து சாமிதரிசனம் செய்து வந்தனர். தொடர்ந்து பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியிறக்க நிகழ்ச்சியுடன் தைப்பூசத் திருவிழா நிறைவடைந்தது.

இந்நிலையில், பழனி முருகன் கோயிலில் இருந்து நீக்கப்பட்ட வேலை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்
சீமான்
அறிக்கை வெளியிட்டார். அதில், முருகனது திருக்கோயில் அடிவாரத்தில் 24 அடி உயரமுள்ள வேலினை தமிழ்நாடு அரசு அவசர அவசரமாக அகற்றியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

தைப்பூசத் திருவிழாவினை முன்னிட்டு கடந்த பல ஆண்டுகளாக மக்கள் வழிபட தற்காலிகமாக நிறுவப்படுகின்ற வேலினை, இந்த ஆண்டு அனுமதி மறுத்து வலுக்கட்டாயமாக அகற்றியிருப்பது எதேச்சதிகாரப்போக்காகும். தமிழ்நாட்டில் எண்ணற்ற வடநாட்டு சாமிகளுக்கும், சாமியார்களுக்கும் சிலைகளும், கோயில்களும், மடங்களும் பல்லாயிரக்கணக்கில் நிறுவப்பட்டுள்ளன. ஒவ்வொன்றாக தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் புதிதாகப் பொது இடங்களில் முளைத்தும் வருகின்றன.

அவற்றை எல்லாம் மக்களுக்கு இடையூறாக இருக்கிறது என்றுகூறி அகற்றவோ, நிறுவக்கூடாது என்று தடுக்கவோ திமுக அரசிற்குத் துணிவிருக்கிறதா? முருகனுக்காக சண்முகா நதிக்கரை ஓரத்தில் மெய்யன்பர்களால் தற்காலிகமாக வைக்கப்பட்ட வேலினை இரவோடு இரவாக அகற்றியது ஏன்? என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி வலியுறுத்தியிருந்தார்.

இதனை விமர்சித்து திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி வன்னி அரசு ட்வீட் போட்டிருந்தார். அதில் , ராமனை வைத்து அரசியல் செய்வது பாஜக என்றும் முருகனை வைத்து அரசியல் செய்வது அட்டகத்தி சீமான் என்றும் குறிப்பிட்டு விமர்சித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நாம் தமிழரின் இடும்பாவனம் கார்த்திக், புலம்பியே செத்துறாதீங்க வன்னி தோழர்!” என்று அதற்கு ரிப்ளை செய்துள்ளார்.

மேலும், நாம் தமிழர் கட்சி எல்லா தேர்தல்களிலும் தனித்து போட்டியிடுவதை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விரும்பவில்லை. பாஜகவை வீழ்த்த திமுகவுடன் விசிக கூட்டணி அமைந்திருப்பதை போல நாம் தமிழரும் வரவேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், சீமான் அதற்கு உடன்படவில்லை. இதனாலேயே இரு தரப்பிலும் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு வன்னி அரசு நாம் தமிழரை சாடி ட்வீட் போட்டிருந்தார். அதில், ஈரோடு கிழக்கில் திமுகவை வீழ்த்த அதிமுக அணிகளை ஒன்றிணைத்து விட்டது பாஜக. திமுகவுக்கு விழும் வாக்குகளை பிரிக்க நாம் தமிழர் கட்சியை களத்தில் இறக்கி உள்ளது பாஜக. நாம் தமிழரின் நோக்கமும் பாஜகவின் நோக்கமும் திமுக எதிர்ப்பே! அண்ணன் சீமான் பாஜகவின் தொங்கு சதை என்பது உறுதி செய்யப்படுகிறது” என்று விமர்சித்திருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.