பகை தீர்க்கும் ஆளுநர்..? மொத்த ரிப்போர்ட்டுடன் டெல்லி விசிட்.. திமுக ஷாக்..!

அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைதாகி சமீபத்தில் சிறையில் இருந்து ஜாமீன் பெற்று வெளியே வந்தார். இந்நிலையில், இவர் திமுக அரசின் மீது பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகிறார். அண்மையில், திமுக தலைவர் ஸ்டாலின், அவரது மகன்
உதயநிதி ஸ்டாலின்
ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார்.

உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயன்ட் பிக்சர்ஸ் நிறுவனம்’ விநியோகம் செய்த துணிவு மற்றும் வாரிசு ஆகிய திரைப்படங்களுக்கு சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளித்தது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மற்றும் உள்துறை செயலாளர் பனீந்தர் ரெட்டி ஆகிய 3 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் எழுத்து பூர்வமாக புகார் அளித்திருந்தார். ஆனால், அப்புகாரின் மீது நடவடிக்கை எடுக்கமாட்டார்கள் என்று தெரிந்தும் நாளை நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டி இருக்கும் என்பதால் புகார் அளித்ததாக சவுக்கு சங்கர் கூறியிருந்தார்.

அதேபோல, கடந்த ஜனவரி 31 ஆம் தேதி அன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த சவுக்கு சங்கர், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி
ஸ்டாலின்
மீதான புகார் மனுவை வழங்கினார். இதனால் இந்த புகார் விவகாரம் மேலும் முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில், சவுக்கு சங்கர் கொடுத்த புகார் குறித்து ஆளுநர் ரவி பரிசீலினை செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று அவசரமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்ற ஆளுநர் ரவி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து தமிழத்தின் சட்ட ஒழுங்கு குறித்து அறிக்கை தாக்கல் செய்யவுள்ளதாகவும் பேசப்பட்டு வருகிறது. மேலும், தமிழக முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் உள்துறை செயலாளர் பனீந்தர் ரெட்டி ஆகியோர் மீது சவுக்கு சங்கர் கொடுத்த புகாரை அமித் ஷாவிடம் வழங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே திமுக அரசுடன் ஆளுநருக்கு மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் சவுக்கு சங்கர் கொடுத்துள்ள அறிக்கைகள் ஆர்.என். ரவிக்கு சாதகமாக இருக்கக்கூடும் என்கின்றனர்.

இருப்பினும் இந்த அறிக்கைகள் எந்த அளவுக்கு திமுக அரசுக்கு அழுத்தத்தை கொடுக்கும் என தெரியவில்லை. திமுக அரசு மீது கடும் குற்றசாட்டு வைத்து வரும் சவுக்கு சங்கர் அண்மையில் ஒரு விஷயத்தை கூறியிருந்தார். திமுக அரசு எந்தெந்த துறைகளில் ஊழல் செய்கிறது எவ்வளவு செய்கிறது என்பதெல்லாம் டெல்லி பாஜகவுக்கு தெரியும். ஆனால், அவர்கள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு ஒரு டீலிங் இருக்கிறது. அது, தமிழ்நாட்டில் எவ்வளவு ஊழல் வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் ஆனால் கடைசியில் காங்கிரசை மட்டும் கழட்டிவிடுங்கள் என்று பாஜக டீலிங் பேசியுள்ளதாக சவுக்கு சங்கர் ஒரு பேட்டியில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.