திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மாணவியை எட்டு மாத கர்ப்பம் ஆக்கிய இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே லாடவரம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கதுரை. இவரது மகன் செல்வா(18), 16 வயதுடைய 12ஆம் வகுப்பு மாணவியை காதலித்து வந்துள்ளார். இதனால் மாணவியுடன் தனிமையில் அழைத்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் மாணவியின் உடல்நிலை பாதிக்கப்படைந்ததால், மாணவியின் தாய் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர் எட்டு மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு மாணவியின் தாய் அதிர்ச்சடைந்தார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தியதில், செல்வா கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் செல்வாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.