Baby Sara: பிஞ்சிலேயே பழுத்த 'சைவம்' சாரா பாப்பா… என்னம்மா புகை விடுது.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தெய்வ திருமகள் படத்தில் நடித்த பேபி சாராவின் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.

பேபி சாரா அர்ஜுன்இந்தியில் 2011 ஆம் ஆண்டு வெளியான 404 என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபி சாரா அர்ஜுன். தொடர்ந்து ஏஎல் விஜய் இயக்கத்தில் வெளியான தெய்வ திருமகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் சாரா. இந்தப் படத்தில் சாராவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அதோடு இந்தப் படம் தமிழ் சினிமாவில் சாரா அர்ஜுனுக்கு பெரும் ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.
​ Leo, Trisha: மூன்றே நாளில் த்ரிஷா சென்னை திரும்பியதற்கான காரணம் இதுதான்.. படக்குழு தகவல்!​
அப்ளாஸை அள்ளிய சாராதொடர்ந்து இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். குறிப்பாக தமிழ் சினிமாவில் சித்திரையில் நிலாச்சோறு, சைவம், விழித்திரு, சில்லு கருப்பட்டி, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்துள்ளார் சாரா அர்ஜுன். சைவம் படத்தில் குட்டிப் பெண்ணாக க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தி அப்ளாஸை அள்ளினார் சாரா அர்ஜுன்.
​ Reshma Pasupuleti: இது புதுசா இருக்கே.. லெஹாங்காவில் திணறடிக்கும் பாக்கியலட்சுமி ராதிகா!​
ரசிகர்கள் அதிர்ச்சிபொன்னியின் செல்வன் படத்தில் சிறுவயது நந்தினியாக நடித்திருந்தார் சாரா அர்ஜுன். குட்டிப் பெண்ணாக இருந்த சாரா அர்ஜுன் தற்போது குமரி பெண்ணாகிவிட்டார். இதனால் அதற்கேற்றார் போன்ற கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் சாரா அர்ஜுன். இந்நிலையில் சாரா அர்ஜுனின் சில போட்டோக்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
​ Biggboss Vikraman: திடீரென ‘அண்ணன்’ கமலை சந்தித்த விக்ரமன்… இன்னுமா அந்த நாடகம் முடியல என பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்!​
சிகரெட் பிடித்தப்படிஅதாவது சாரா அர்ஜுன் தமிழில் நடித்து வரும் ‘கொட்டேஷன் கேங்’ எனும் திரைப்படத்தில், சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதில் சிகரெட்டை வாயில் வைத்தப்படியும் புகை விட்டப்படியும் மிரட்டலாக நடித்துள்ளார் சாரா அர்ஜுன். இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், தெய்வதிருமகள், சைவம் படத்தில் நடித்த குட்டிப் பாப்பாவா இப்படி நடிக்க ஆரம்பித்துவிட்டார் என பெருமூச்சு விட்டுள்ளனர்.
​ கல்லூரி விழாவில் நயன்தாரா.. காரணம் இதானா?​
பிஞ்சியிலேயே பழுத்துடுச்சு..மேலும் 17 வயதிலேயே இப்படியெல்லாம் நடிப்பது பிஞ்சியிலேயே பழுத்தது போல் உள்ளது என்றும் கூறி வருகின்றனர். சினிமாவில் வளரும் நேரத்தில் கதாப்பாத்திரங்களை தேர்வு செய்வதில் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். சாரா அர்ஜுனின் அப்பா ராஜ் அர்ஜுனும் இந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
​ Dancer Ramesh: 20 வருஷத்துக்கு முன்னாடியே காதலிச்சோம்… அவர்தான் என் உயிர்… கதறும் இன்பவள்ளி!​
Sara Arjun

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.