ஆள் குறைப்பு நடவடிக்கையால் பேஸ்புக் பதிவிடுவதில் சிக்கல்: 12 ஆயிரம் பேர் புகார்

புதுடெல்லி: சமூக ஊடக வலைதளங்களான டுவிட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி தங்கள் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். ஆனால் தற்போது டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவை உலக அளவில் ஆயிரக்கணக்கான பயனாளிகளை முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் அதிகபட்சமாக செயல் இழப்புகள் ஏற்பட்டு உள்ளது. ஏராளமான டுவிட்டர் பயனாளிகள் தங்களால் புதிய பதிவுகளை பதிவிட முடியவில்லை என ஆதங்கப்படுகின்றனர்.

இதற்கு காரணம் நீங்கள் பதிவு அனுப்புவதற்கான தினசரி வரம்பை தாண்டி விட்டீர்கள் என தவறான தகவல் வருவதாகவும் தெரிவித்துள்ளனர். எலான் மஸ்க் என்பவர் அக்டோபர் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். அதன் பின்னர் அங்கு பணியாற்றி வந்த ஊழியர்களை குறைத்தார். இதனால் தான் இந்த குறைபாடுகள் வருவதாக டுவிட்டரை பயன்படுத்துபவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால் டுவிட்டர் நிறுவனம் இந்த சிக்கலை அறிந்து இருப்பதாகவும், அதனை சரி செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

உங்களில் சிலருக்கு டுவிட்டர் எதிர்பார்த்தபடி செயல்படாமல் இருக்கலாம். சிக்கலுக்கு மன்னிக்கவும். இதனை சரி செய்வதற்கு நாங்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு வருவதாகவும் டுவிட்டர் ஆதரவு தெரிவித்துள்ளது. 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேஸ்புக் பயனாளிகள் இது தொடர்பாக புகார் அளித்துள்ளனர். 7 ஆயிரம் இன்ஸ்டாகிராம் பயனாளிகளும் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.