சீனாவின் உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், இந்தியா, ஜப்பான் உள்பட பல்வேறு நாடுகளுக்கும் இது போன்ற உளவு பலூன்களை சீனா அனுப்பி வைத்துள்ளதாக அமெரிக்க ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ராணுவத் தளங்களை உளவு பார்க்க, தொழில்நுட்ப ஆற்றல் பதித்த உளவு பலூன்களை சீனா அனுப்பி வைத்ததாகக் கூறப்பட்டாலும் இதுதொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இதனிடையே, 40 நாடுகளின் தூதர்களை அழைத்து சீனாவின் உளவு பலூன்களைப் பற்றிய தகவல்களை அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் வெண்டி ஷெர்மேன் பகிர்ந்து கொண்டார்.