ஈரோடு: தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பார்த்துக் கொண்டிருக்கிறது என ஈரோட்டில் நடைபெறும் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை எதிரொலிக்கும் எனவும் கூறினார்.
