வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: சர்வதேச ஏரிபொருள் விலை அதிகரித்தால், இந்தியாவில் காஸ் சிலிண்டர் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி விளக்கம் அளித்தார்.

காஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஏழை மக்களின் வாழ்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என லோக்சபாவில் திமுக எம்.பி கலாநிதி கேள்வி எழுப்பினார்.
கேள்விக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அளித்த பதில்:
* நாடு முழுவதும் தற்பொழுது 14.2 கிலோ மற்றும் 5 கிலோ சமையல் காஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
* கடந்த 2017- 2022 ம் நிதியாண்டு வரை ஒட்டு மொத்தமாக 816.28 கோடி காஸ் சிலிண்டர்கள் நாடு முழுவதும் விநியோகப்பட்டிருக்கிறது.
இதில்(814.82 கோடி காஸ் சிலிண்டர்கள் 14.2 கிலோ எடையும், 1.46 கோடி சிலிண்டர்கள் 5 கிலோ எடை கொண்டவை. தமிழகத்தில் மொத்தமாக 64.53 கோடி சிலிண்டர்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

* 2023 பிப்ரவரி மாதம் 1ம் தேதி நிலவரப்படி சமையல் எரிவாயு காஸ் சிலிண்டர் ஒன்றின் விலை ரூ. 1053க்கு விற்பனை செய்யப்படுகிறது.
* சமையல் எரிவாயுக்களைப் பொருத்தவரை 60% இந்தியா இறக்குமதி செய்கிறது. இதில் ஒரு மெட்ரிக் டன் 454 அமெரிக்க டாலர்களாக இருந்த நிலையில், கடந்த 2021 -2022 ம் நிதியாண்டில் அது 693 அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
* சர்வதேச ஏரிபொருள் விலை அதிகரித்தால், இந்தியாவில் காஸ் சிலிண்டர் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இந்த இழப்பை சரி செய்ய மத்திய அரசு ரூ.22 ஆயிரம் கோடி ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
* எரிவாயு சிலிண்டரின் ஒப்பந்த விலை உயர்ந்த பின்னரும், வீட்டு உபயோக சிலிண்டரின் விலை மிக குறைந்த அளவே உயர்த்தப்பட்டது. இவ்வாறு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி விளக்கம் அளித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement