பாலிவுட் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகின் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார் நடிகை ஹன்சிகா மோத்வானி. தமிழில் விஜய், ஜெயம் ரவி, சூர்யா, கார்த்தி, சிம்பு, தனுஷ், விஷால், ஆர்யா போன்ற பல நடிகர்களுடன் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் இவர் என்ட்ரி ஆனதும் இவரை ரசிகர்கள் பலரும் சின்ன குஷ்பூ என்று அழைத்தனர். திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வந்த நடிகை ஹன்சிகா கடந்த ஆண்டு டிசம்பர்-4ம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா அரண்மனையில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் தனது நண்பரும், காதலருமான சோஹைல் கதூரியாவை திருமணம் செய்துகொண்டார். பல பிரபலங்களின் திருமண நிகழ்வுகளை சில ஓடிடி நிறுவனங்கள் ஒரு கணிசமான தொகையை கொடுத்து ஸ்ட்ரீமிங் செய்துவரும் நிலையில் ஹன்சிகாவின் திருமண நிகழ்வை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வரும் பிப்ரவரி 10-ம் தேதியன்று ஸ்ட்ரீமிங் செய்கிறது.
நடிகை ஹன்சிகாவின் திருமண வீடியோ டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ‘லவ் ஷாதி டிராமா’ என்கிற தலைப்பில் வெளியாகவுள்ளது. தற்போது திருமண வீடியோவின் ட்ரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. சந்தோசம், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், அழுகை என இந்த வீடியோ பல உணர்ச்சிகள் நிறைந்த ஒரு திரைப்படம் போல உருவாகியுள்ளது. இந்த வீடியோவில் ஹன்சிகா தனது கடந்த கால காதல் வாழ்க்கையை பற்றி நினைவுகூர்ந்து உணர்ச்சிவசப்பட்டு பேசியிருப்பது வைரலாகி வருகிறது. ஏற்கனவே சிம்பு-ஹன்சிகா இருவரும் காதல் உறவில் இருந்ததும், அந்த உறவு சில நாட்களிலேயே முறிந்ததும் அனைவருக்கும் தெரியும். இதுகுறித்து பேசிய ஹன்சிகா, நான் ஏற்கனவே ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்ததுள்ளேன், அதை மீண்டும் செய்ய வேண்டாம் என நினைத்தபோது தான் இது நடந்தது. இனிமேல் நான் ரிலேஷன்ஷிப்பில் இருந்தால் அது நான் திருமணம் செய்துகொள்ளப்போகும் நபராக தான் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன் என்று கூறியுள்ளார்.
மேலும் பேசியவர், கையில் பேப்பரும், பேனாவும் கிடைத்துவிட்டால் அடுத்தவர்களின் வாழ்க்கையை நாசமாக்க முடியும் என்று பலரும் நம்புகின்றனர் என்று உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளார். சோஹைல் கதூரியா ஹன்சிகாவின் நெருங்கிய தோழியான ரிங்குவின் முன்னாள் கணவர், இவர்கள் இருவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டது. இவர்களது திருமண நிகழ்வில் ஹன்சிகா நடமாடிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.