துருக்கி பேரிடர்… பள்ளி கைப்பந்து அணி தொடர்பில் வெளிவரும் பகீர் தகவல்


நடுங்கவைத்த துருக்கி நிலநடுக்கத்திற்கு பின்னர் ஒரு பள்ளியின் கைப்பந்து அணி முழுவதைம் மாயமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தரைமட்டமான ஹொட்டல் கட்டிடம்

குறித்த அணியினர் தங்கியிருந்த ஹொட்டல் கட்டிடம் மொத்தமாக தரைமட்டமானதாக தெரியவந்ததையடுத்து, இந்த பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

துருக்கி பேரிடர்... பள்ளி கைப்பந்து அணி தொடர்பில் வெளிவரும் பகீர் தகவல் | Turkish Earthquake School Volleyball Team Missing

@reuters

துருக்கிய ஆக்கிரமிப்பு சைப்ரஸில் இருந்து தெற்கு துருக்கிக்கு பயணம் செய்த உயர்நிலைப் பள்ளி கைப்பந்து அணியைச் சேர்ந்த கிட்டத்தட்ட 30 பேர் மொத்தமாக இறந்திருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது.

நிலநடுக்கம் ஏற்பட்ட போது இளைஞர்களும் அவர்களது ஆசிரியர்களும் அதியமான் நகரின் மையத்தில் உள்ள ஐசியாஸ் விடுதியில் தங்கியிருந்துள்ளனர்.
அதியமான் நகரில் பெரும்பாலான கட்டிடங்கள் தரைமட்டமாககியுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

திங்கட்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னர், அந்த கைப்பந்து அணியிடம் இருந்து எவ்வித தகவலும் இல்லை என்றே உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, Namik Kemal உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த ஒரு குழு, Maarif Turkish கல்லூரியை சேர்ந்த ஒரு குழுவும் மாயமானதாக அதிகாரிகள் தரப்பு அச்சம் தெரிவித்துள்ளனர்.

துருக்கி பேரிடர்... பள்ளி கைப்பந்து அணி தொடர்பில் வெளிவரும் பகீர் தகவல் | Turkish Earthquake School Volleyball Team Missing

@AP

மொத்தமாக மாயமான தகவல்

துருக்கியில் 7 நாட்கள் துக்கமனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கைப்பந்து அணி மொத்தமாக மாயமான தகவல் வெளியானதும் உறவினர்கள் மற்றும் மீட்பு அதிகாரிகள் தரப்பு அதியமான் நகருக்கு விரைந்துள்ளனர்.

கைப்பந்து அணியினர் தங்கியிருந்த 8 மாடி ஹொட்டலானது மொத்தமாக உருக்குலைந்துள்ளது.
இருப்பினும், கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் உயிருடன் இருக்கலாம் என்றே நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

துருக்கி பேரிடர்... பள்ளி கைப்பந்து அணி தொடர்பில் வெளிவரும் பகீர் தகவல் | Turkish Earthquake School Volleyball Team Missing

@AP



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.