மதுரை மெட்ரோ ரயில்: திருமங்கலம் டூ ஒத்தக்கடை வரை… CMRL மாஸ்டர் பிளான்!

தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் நகரங்களில் நெரிசலை குறைக்கும் வகையில் நவீன போக்குவரத்து வசதிகளை கொண்டு வர திட்டமிடப்பட்டு வருகிறது. தற்போது சென்னையில் மட்டும் மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டில் உள்ளது. இதனை இரண்டாம் நிலை நகரங்களுக்கும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மெட்ரோலைட் திட்டம்

அந்த வகையில் மதுரையில் மெட்ரோலைட் எனப்படும் இலகுரக மெட்ரோ ரயில் சேவையை செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவை ட்ராம்கள் போன்று சாலையில் தனி ட்ராக்கில் இயங்கும். ஆனால் மதுரையில் சாலைப் பகுதியில் ஏற்கனவே இட நெருக்கடி அதிகமாக இருப்பதால் மெட்ரோ ரயில்கள் போன்று உயர்மட்ட பாலம் அமைத்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மதுரையில் 2200 ஆண்டு பழமையான புதிய தமிழி கல்வெட்டு கண்டுபிடிப்பு.

திருமங்கலம் டூ ஒத்தக்கடை

அதேசமயம் குறைந்த செலவில் இந்த மெட்ரோ ரயில் சேவையை கொண்டு வர பொறியாளர்களுடன் ஆலோசித்து வருகின்றனர். முதல்கட்டமாக திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 31 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவையை கொண்டு வர தீவிரம் காட்டப்பட்டு வருகிறது.

ரயில் நிலையங்கள்

இதற்கான தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் விட்டு சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் (CMRL) அறிவுறுத்தியுள்ளது. மதுரை மெட்ரோ ரயிலின் முதல்கட்ட திட்டத்தில் மொத்தம் 20 ரயில் நிலையங்கள் இடம்பெறும் எனத் தெரிகிறது. அதாவது,

திருமங்கலம்கப்பலூர் டோல் கேட்தர்மத்துபட்டிதோப்பூர்திருநகர்திருப்பரங்குன்றம்பசுமலைவசந்த நகர்மதுரா காலேஜ்மதுரை ஜங்ஷன்சிம்மக்கல்கீழவாசல்தெற்குவாசல்கோரிப்பாளையம்போலீஸ் கமிஷனர் ஆபீஸ்கே.புதூர்மாட்டுத்தாவணிஊத்தங்குடிஉயர் நீதிமன்ற மதுரைக் கிளைஒத்தக்கடை

ஆகிய ரயில் நிலையம் வர வாய்ப்புள்ளது. முதலில் மூன்று ரயில்களை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து மணிக்கு 25 கிலோமீட்டர் முதல் 60 கிலோமீட்டர் வேகம் வரை இயக்க திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மதுரை மெட்ரோ ரயிலின் பணிமனை திருமங்கலத்தில் அமைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

விரிவான திட்ட அறிக்கை

இந்த வழித்தடத்தில் சுரங்க பாதை அமைக்க வேண்டிய தேவை இருக்கிறதா? என்பது பற்றியும் ஆய்வு செய்யவுள்ளனர். தற்போது விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதில் திட்டத்திற்கான செலவு, எந்த வழியில் செல்ல வேண்டும், ரயில் நிலையங்கள், இட வசதி, நிலம் கையகப்படுத்துதல், பணிகளை முடிக்கும் கால அளவு,

சமூக மற்றும் பொருளாதார காரணிகள் ஆகியவை பற்றிய விவரங்கள் இடம்பெறும். திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரையிலான மெட்ரோ ரயில் திட்டம் போன்று மேலும் இரண்டு திட்டங்களும் ஆலோசனையில் இருக்கின்றன. அவை, மதுரை விமான நிலையம் முதல் காட்டுப்புலி நகர், நாகமலை புதுக்கோட்டை முதல் மணலூர் ஆகிய திட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை மெட்ரோ ரயில் திட்டம் பயன்பாட்டிற்கு வந்துவிட்டால் வர்த்தக ரீதியில் மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கி செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.