
ஹன்சிகாவின் புதிய திரில்லர் படம் துவக்கம்
திருமணத்திற்கு பிறகு பிசியாக நடித்து வருகிறார் ஹன்சிகா. தற்போது அவர் தமிழில் ரவுடி பேபி, கார்டியன், காந்தாரி படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அடுத்த அவர் இகோர் இயக்கும் படத்தில் நடிக்கிறார். ஆர்யா நடித்த கலாபகாதலன், வந்தாமல, திக் திக் படங்களை இயக்கியவர் இகோர்.
இந்த படத்தை மெட்ராஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில் நந்தகுமார் தயாரிக்கிறார், ஜிப்ரான் இசை அமைக்கிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இதன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. மற்ற நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. இது ஹீரோயின் சப்ஜெக்ட், திரில்லர் படம் என்கிறார்கள்.