AK 62:ஏ.கே. 62 படத்தில் யார் இருக்கார்னு பாருங்க: அவரே கொடுத்த மாஸ் அப்டேட்

ஏ.கே. 62 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவிருக்கும் நேரத்தில் அதில் வேலை செய்யப்போகும் ஒருவர் உறுதியாகிவிட்டதாக பேசப்படுகிறது.

ஏ.கே. 62லைகா நிறுவன தயாரிப்பில் அஜித் குமார் நடிக்கவிருக்கும் படம் ஏ.கே. 62. அந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, அவரின் நண்பர் அனிருத் இசையமைப்பார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் விக்னேஷ் சிவனை நீக்கிவிட்டார்கள். நண்பனை நீக்கிய பிறகு ஏ.கே. 62 படத்தில் இருந்து விலகிவிட்டார் அனிருத். இந்நிலையில் தான் அந்த தகவல் வெளியாகியிருக்கிறது.
சந்தோஷ் நாராயணன்ஏ.கே. 62 படத்திற்கு சந்தோஷ் நாராயணன் அல்லது சாம் சி.எஸ். இசையமைக்கக்கூடும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தான் கண் மூடி சந்தோஷமாக போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து வைப் என தீ எமோஜியை தட்டிவிட்டுள்ளார். அதை பார்த்த அஜித் ரசிகர்களோ, ஏ.கே. 62 படம் தான், கண்டுபிடித்துவிட்டோம்ல. வாழ்த்துக்கள் சந்தோஷ் நாராயணன். ஏ.கே. படத்திற்கு மாஸாக பி.ஜி.எம். போடுங்கள் அண்ணா என தெரிவித்துள்ளனர்.
வைப் View this post on Instagram A post shared by Santhosh Narayanan (@musicsanthosh)
இயக்கம்விக்னேஷ் சிவன் விலகியதை அடுத்து ஏ.கே. 62 படத்தை இயக்கும் வாய்ப்பு மகிழ் திருமேனிக்கு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. படத்தை இயக்குவது மட்டும் தான் மகிழ் திருமேனியாம். கதை பி.எஸ். மித்ரனுடையதாம். இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை எதையும் நம்ப முடியாது. இதற்கிடையே பிரபலமில்லாத இயக்குநர் ஒருவரை தேர்வு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

​AK62:யாருமே எதிர்பார்க்காத இயக்குநரை தேர்வு செய்த அஜித்?:பெரிய டுவிஸ்டா இருக்கே

அறிவிப்புஏ.கே. 62 படத்தை இயக்கப் போவது யார், இசையமைக்கப் போவது யார் என்பதை உறுதி செய்துவிட்டார்கள். அந்த படக்குழுவின் புகைப்படத்துடன் இந்த வாரமே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று விபரம் அறிந்த வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்பொழுது வெளியாகும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.
ரசிகர்கள்அஜித் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் மாறினாலும் காட்சி மாறவில்லை. வழக்கம் போன்று அப்டேட்டை எதிர்பார்த்து காத்திருப்பது தான் அஜித் ரசிகர்களுக்கு வேலையாகிவிட்டது. ஆனால் அவர்களை பார்த்தாலும் பாவமாக உள்ளது. ரசிகர்களின் மனநிலையை புரிந்து கொண்டு சட்டுபுட்டுனு அப்டேட்டை விடுங்கப்பா என சமூக வலைதளவாசிகள் கூறியுள்ளனர்.
விக்னேஷ் சிவன்ஏ.கே. 62 படத்தை இயக்கப் போவது அவர் தான், இவர் தான் என பேசப்பட்டு வரும் நிலையில் விக்னேஷ் சிவனுக்கு அவரின் ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள். நீங்கள் வேறு ஒரு படம் எடுங்கள். எதிர்காலத்தில் நிச்சயம் அஜித்தை உங்களை அழைத்து கதை சொல்லச் சொல்வார். பிரபஞ்சத்தின் சக்தியை நம்புங்கள் அன்பான இயக்குநரே என்கிறார்கள் ரசிகர்கள்.

​AK62, Vignesh Shivan: அஜித், லைகா செய்தது அநியாயம், விக்கிக்கு நியாயம் வேண்டும்: ரசிகர்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.