விஜய் நடிப்பில் சமீபத்தில் வாரிசு திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. என்னதான் இப்படத்திற்கு எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது வாரிசு. இதையடுத்து இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்திருக்கும் லியோ படத்தில் நடித்து வருகின்றார் விஜய்.
மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ் மற்றும் விஜய்யின் கூட்டணி இப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். என்னதான் மாஸ்டர் வெற்றிபெற்றாலும் அப்படம் முழுக்க முழுக்க லோகேஷின் ஸ்டைலில் இல்லை என்ற ஒரு குற்றச்சாட்டு இருந்து வந்தது.
Lokesh kanagaraj: சம்பளத்தில் ஷங்கரை நெருங்கிய லோகேஷ்..லியோ படத்திற்கு இவ்வளவா ? அடேங்கப்பா..!
அதை சரிசெய்யும் வகையில் தற்போது உருவாகிவரும் லியோ படத்தை முழுக்க முழுக்க தன் ஸ்டைலில் உருவாக்கி வருகின்றார் லோகேஷ். இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோ கடந்த வாரம் வெளியாகி மாஸ் ஹிட்டடித்த நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இதையடுத்து இப்படத்தில்
கமல்
மற்றும் விக்ரம் ஆகியோர் நடிப்பதாக தகவல்கள் வர தற்போது அதெல்லாம் வெறும் வதந்திதான் என தெரியவந்துள்ளது. அதே போல இப்படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம்சரண் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக பேசப்பட்டு வந்தது.
இதன் காரணமாக தெலுங்கு ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். இந்நிலையில் தற்போது லியோ படத்தில் ராம் சரண் நடிப்பதாக வந்த தகவலும் வதந்தி தான் என தெரியவந்துள்ளது. இதன் காரணமாக ராம் சரணின் ரசிகர்கள் உச்சகட்ட வருத்தத்தில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.