Leo, Trisha: ஒரு வீடியோ, ஒரு ரீட்வீட்: லியோ சர்ச்சையை முடித்து வைத்த த்ரிஷா

Lokesh Kanagaraj: லியோ படம் தொடர்பாக த்ரிஷா வெளியிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

லியோகோலிவுட்டின் ராசியான ஜோடிகளில் ஒன்று விஜய்-த்ரிஷா ஜோடி. 14 ஆண்டுகள் கழித்து அந்த ஜோடியை தன் லியோ படத்தில் நடிக்க வைத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். வெற்றிக் கூட்டணி மீண்டும் சேர்ந்த சந்தோஷத்தில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் லியோ படத்தில் இருந்து த்ரிஷா விலகிவிட்டதாக தகவல் வெளியாகி தீயாக பரவியது. இதை பார்த்த த்ரிஷா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
த்ரிஷாத்ரிஷாவும், விஜய்யும் சேர்ந்து நடித்த படங்களில் வந்த காட்சிகளை ஒன்றிணைத்து சன் மியூசிக் சேனல், வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவை இன்ஸ்டா ஸ்டோரீஸில் போஸ்ட் செய்தார் த்ரிஷா. மேலும் சன் மியூசிக்கின் அந்த வீடியோ ட்வீட்டை ரீட்வீட்டும் செய்துள்ளார். இதன் மூலம் தான் லியோ படத்தில் இருப்பதை த்ரிஷா உறுதி செய்துவிட்டார்.
வீடியோ
ரசிகர்கள்த்ரிஷா வெளியிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்களுக்கு ஒரே குஷி தான். மேலும் லியோ படம் தொடர்பான ரீட்வீட்டுகள், லைக்குளை த்ரிஷா நீக்கியதால் தான் அவர் லியோவில் இருந்து கிளம்பிவிட்டார் என்று முதலில் பேச்சு கிளம்பியது. ஆனால் ரீட்வீட்டுகள், லைக்குளை அடிக்கடி நீக்குவது த்ரிஷாவின் பழக்கம். இந்நிலையில் அவர் லியோ தொடர்பான வீடியோவை ரீட்வீட் செய்ததை விஜய் ரசிகர்களை கவர்ந்துவிட்டது.

புகைப்படம்விமான நிலையத்தில் த்ரிஷா இருக்கும் பழைய புகைப்படம் வெளியானது. ஆனால் அது லேட்டஸ்ட் புகைப்படம் என தவறாக புரிந்து கொண்ட ரசிகர்களோ, காஷ்மீரில் இருந்து கிளம்பிவிட்டார் த்ரிஷா என கூறினார்கள். லியோ படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் தான் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே அது பழைய புகைப்படம் என தெரிய வந்த பிறகு ரசிகர்கள் அமைதியானார்கள்.

​Leo, Trisha:லியோவில் இருந்து த்ரிஷா விலகிட்டார்னு பேச்சு கிளம்பியது ஏன்னு தெரியுமா?

உமாத்ரிஷா பற்றி ஒரே பேச்சாக இருக்கிறதே என அவரின் அம்மா உமாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, என் மகள் லியோ படத்தில் இருந்து விலகவில்லை. அவர் காஷ்மீரில் படப்பிடிப்பில் தான் இருக்கிறார். அதனால் த்ரிஷா விலகிவிட்டார் என்பதை நம்ப வேண்டாம் என்றார்.

வதந்திKamal Haasan, Trisha: ஒரே நேரத்தில் த்ரிஷாவுக்கும், கமலுக்கும்….ஏய் எப்புட்றா?இது என்னய்யா த்ரிஷாவுக்கு வந்த சோதனை. விஜய்யுடன் சேர்ந்து நடிக்கிறார் என சந்தோஷப்பட்டால் இப்படி கண்டமேனிக்கு வதந்தி கிளம்புகிறதே. அடுத்து என்ன வதந்தி கிளம்பப் போகிறதோ?. இது த்ரிஷாவுக்கு மட்டும் அல்ல லியோவுக்கும் சேர்த்து வந்த சோதனை என்கிறார்கள் ரசிகர்கள். படத்தின் ஹீரோ தளபதியாக்கும். ஆனால் அவர் பற்றி ஒரு தககவலும் வெளியாகவில்லையே என்பது தான் ரசிகர்களின் கவலை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.