நியூடெல்லி: Netflixல் யூ சீசன் 4 எப்போது வெளியாகும்? என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு இன்றும் முற்றுப்புள்ளி விழுந்துவிடும். ஜோ கோல்ட்பர்க் மீண்டும் நமது வீட்டு திரைக்கு எப்போது வருவார் என பல ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், இன்றே வந்துவிடுவேன் என்று பதில் வருகிறது. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ’யூ; மெகாத்தொடரின் நான்காவது சீசன் பிப்ரவரி 9 ஆம் தேதி வியாழன் அன்று ஸ்ட்ரீமரில் வெளியாகிறது. முதல் பாகம் இன்றும், அதன் அடுத்த பாகம் ஒரு மாதம் கழித்து மார்ச் 9 வியாழன் அன்று வெளியிடப்படும்.
’யூ’ தொடரில், தொடர் கொலையாளி கதாநாயகன் ஜோ கோல்ட்பர்க், ஒவ்வொரு சீசனிலும் பெண்கள் மீது வெறிபிடித்து அலையும் திரில்லர் கதையின் வழக்கமான வடிவமைப்பிலிருந்து புதிய சீசன் சற்று மாறுபட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நெட்ஃபிலிக்ஸின் இந்த சீசனில், லண்டனில் இலக்கியப் பேராசிரியராக பணியாற்றும் ஜோனாதன் மூரின் புதிய ஆளுமையை ஜோ ஏற்றுக்கொள்வதால், கதைக்களம் மாறலாம்.
Netflixல் யூ சீசன் 4
யூ சீசன் 4 இரண்டு பகுதிகளாக வெளியிடப்பட்டது, பகுதி 1 பிப்ரவரி 9 வியாழக்கிழமை, அதாவது இன்று வெளியிடப்படுகிறது. முதல் பாகத்தில், ஐந்து புதிய அத்தியாயங்கள் GMT காலை 8 மணிக்கு Netflix இல் களம் இறக்கப்படும். இந்தத் தொடரில் தீவிர ரசிகர்ஜ்கள், உடனடியாக இந்த எபிசோட்களை பார்த்துவிடுவார்கள் என்பது நிச்சயம்.
நான்காம் சீசனின் பகுதி இரண்டின் கடைசி ஐந்து அத்தியாயங்கள் மார்ச் 9 வியாழன் அன்று வெளியிடப்படும், வெளியீட்டு நேரம் பகுதி 1 போலவே இருக்கும்.
புதிய முகங்கள் பலருடன், ஜோ ஒரு புதிய ஆளுமையுடன் சீசன் 3-ல் இருந்து வெளியே வருவார். டிரெய்லரைப் பார்த்தால், இது கொலை மற்றும் வஞ்சகம் நிறைந்த சீசனாக அமைக்கப்பட்டுள்ளதாக யூகிக்கலாம், கரோலின் கெப்னஸின் நாவல்களை அடிப்படையாகக் கொண்ட நெட்ஃபிக்ஸ் தொடரிலிருந்து நாம் எதிர்பார்ப்பது என்ன.
மிகவும் கேள்விக்குரிய ஆசிரியரிடமிருந்து நதியா தவறான பாடங்களைக் கற்றுக் கொள்ள மாட்டார் என்று நம்புகிறோம்.