டெல்லி: அதானி நிறுவனம் மீதான ஹிண்டன்பர்க் புகார் விவகாரம் குறித்து செபி அமைப்பு பதிலளிக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. செபி அமைப்பு வரும் திங்கள்கிழமைக்குள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி குழும பங்குகள் விலை வீழ்ச்சியடைந்து சிறு முதலீட்டாளருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பங்குச்சந்தை வீழ்ச்சியை கட்டுப்படுத்துவதில் செபி செயலற்று விட்டதாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
