இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்! கடலில் இடிந்து விழுந்த கட்டிடங்கள்.. நால்வர் பலி


இந்தோனேசியாவின் பப்புவா வடக்கு கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நான்கு பேர் பலியாகினர்.


5.4 ரிக்டர் அளவு

உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.28 மணிக்கு 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜெயபுரா நகரின் தென்மேற்கில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக இந்தோனேசியாவின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் ஒரு ஹொட்டலின் கட்டிடங்கள் கடலில் இடிந்து விழுந்தது. இதில் குறைந்தது நான்கு பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின்போது மக்கள் வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து பாதுகாப்புக்காக ஓடியுள்ளனர். மேலும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்! கடலில் இடிந்து விழுந்த கட்டிடங்கள்.. நால்வர் பலி | Earthquake In Indonesia Four Killed

@Faisal Narwawan/AFP

1079 நிலநடுக்கங்கள்

டெக்டோனிக் தட்டுகள் மோதும் பசிபிக் நெருப்பு வளையத்தில் அதன் நிலை காரணமாக இந்தோனேசியா அடிக்கடி நில அதிர்வு மற்றும் எரிமலை செயல்பாடுகளை சந்தித்து வருகிறது.

கடந்த மாதம் 2ஆம் திகதி முதல், ஜெயபுரவைச் சுற்றி 1,079 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன என்றும், சுமார் 132 நிலநடுக்கங்கள் அதன் குடியிருப்பாளர்களால் உணரப்பட்டன என்றும் BMKG தலைவர் Dwikorita Karnawati தெரிவித்தார்.  

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்! கடலில் இடிந்து விழுந்த கட்டிடங்கள்.. நால்வர் பலி | Earthquake In Indonesia Four Killed

@Faisal Narwawan/AFP



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.