ஈரோடு: ஈரோடு இடைத்தேர்தலில் வேட்பாளர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் கூடுதல் வாக்கு இயந்திரங்கள் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இடைதேர்தலுக்காக ஏற்கனவே 286 வாக்கு இயந்திரங்கள், 310 விவி பேட் இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கொல்லம்பாளையத்தில் அரசு பள்ளி கிடங்கில் இருந்து 1,000 வாக்கு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
