உபி உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு; அம்பானி ஆஜர்..அதானி மிஸ்ஸிங்.!

உத்தரபிரதேசத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்கும், வெளிநாட்டு முதலீட்டாளர்களை உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு (ஜிஐஎஸ் 2023) அழைப்பதற்கும், தனது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழு மூலம் முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளிநாடுகளில் ரோட்ஷோ நடத்தினார். அதன்படி கடந்த டிசம்பரில், முதல்வர் யோகியின் வழிகாட்டுதலின் கீழ், அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளின் எட்டு பிரதிநிதிகள், 16 நாடுகளில் உள்ள 21 நகரங்களுக்குச் சென்று ₹ 7.12 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டங்களைப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலத்தில் உள்ள பல்வேறு துறைகளில் உள்ள வாய்ப்புகளை முதலீட்டாளர்களுக்கு அறிமுகப்படுத்த முதல்வர் யோகி ஆதித்யநாத் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதேபோல் மாநிலத்திற்கு பெருமளவிலான உள்நாட்டு முதலீடுகளை கொண்டு வர பொறுப்பேற்றுள்ளார்.

உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டிற்கு, முன்னதாக உள்நாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக மும்பைக்கு இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்ட உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், நொய்டாவில் வரவிருக்கும் பிலிம் சிட்டியின் சூழலில் நாட்டின் முன்னணி அதிபர்கள் மற்றும் வங்கியாளர்கள் மற்றும் முக்கிய திரையுலகப் பிரமுகர்களைச் சந்தித்து உத்தரபிரதேசத்தில் முதலீடு செய்ய அழைத்தார். மேலும் பல்வேறு தொழிலதிபர்களுடன் உபி முதல்வர் கலந்துரையாடினார்.

இந்தநிலையில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இன்று உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெறும் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார். இந்த மாநாட்டில் உலக அளவிலான முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் இந்திய பெரு முதலாளிகளான அம்பானி, ஆதித்ய பிர்லா குழுமம், டாடா குழுமம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

5ஜி தொழில்நுட்பத்துறையில் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு 75 ஆயிரம் கோடியை உத்தரபிரதேசத்தில் முதலீடு செய்ய உள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக மேலாளர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இந்தியாவின் முக்கிய முதலீட்டாளர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில், அதானி குழுமம் பங்கேற்காதது பேசுபொருளாகியுள்ளது.

பெரிய அளவிலான முதலீடுகள் நடைபெறும் கூட்டங்களில் தவறாது கலந்து கொள்ளும் அதானி, இம்முறை பங்கேற்கவில்லை. அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹிண்டர்பர்க், அதானியின் முறைகேடுகள் குறித்து ஆய்வறிக்கை வெளியிட்ட பின்னர், அவரது சொத்து மதிப்பு கடுமையாக சரிந்து வருகிறது.

ஒரு ஆவணப்படம் எப்படி இந்தியாவை பாதிக்கும்? பிபிசி-க்கு எதிரான மனு தள்ளுபடி – உச்ச நீதிமன்றம்

அதானி முறைகேடுகள் குறித்து நாடாளுமன்ற குழு விசாரணை நடத்த வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அதானி மற்றும் பிரதமர் மோடி குறித்து, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசிய கருத்துகள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. அதைத் தொடர்ந்து அவரது கருத்துகள் நாடாளுமன்ற அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடதக்கது. பிரதமர் மோடி அதானியின் நெருக்கத்தை தற்போது தவிர்த்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.