எப்பப் பாரு இட்லி ,தோசை, பொங்கல் தானா? – ஆரோக்கியமான ராகி ரெசிபிகள் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

எப்பப் பாரு இட்லி ,தோசை , அப்பா பொங்கல் தானா? சனிக்கிழமையாவது ஏதாவது வித்தியாசமா செய்ப்பா அப்படின்னு உங்க வீட்ல சொல்றாங்களா..? டோண்ட் ஒர்ரி நண்பர்களே!

கேழ்வரகு மாவில் சில வித்தியாசமான ரெசிபிகளை செய்து அசத்துங்கள். நீங்களும் சாப்பிட்டு விளம்பர அம்மாக்களைப் போல் ஜொலித்திடுங்கள்!

கேழ்வரகு மாவில் நான் செய்யும் ரெஸிபிகளுக்கு உறவு மற்றும் நட்பு வட்டாரத்தில் ரசிகர் பட்டாளமே உண்டு.. இதையெல்லாம் புதிதாக கண்டுபிடித்தேன் என்று சொல்ல மாட்டேன். .அம்மா செய்ததை… சில பல பொருட்களைச் சேர்த்து வித்தியாசமான சுவையில் செய்கிறேன். அவ்வளவுதான்! அது நிறைய பேருக்கு பிடித்து விட்டது!

Ragi

*ஹெல்தி அடை.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி அரைக்கப் முருங்கைக்கீரை சேர்த்து லேசாக வதக்கி, ஒரு கப் கேழ்வரகு மாவில் கொட்டி ,(தேவையான உப்பு சேர்த்து )நீர் கொண்டு சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் பிசைந்து ஒரு பெரிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கவும். பால் கவரில் எண்ணெய் தடவி ஒரு உருண்டையை எடுத்து நன்கு மெலிதாக தட்டி தவாவில் போட்டு எண்ணெய் விட்டு திரும்பி போட்டு வெந்ததும் எடுக்கவும் சுவையில் அசத்தும் இந்த அடை.(தொட்டுக்கொள்ள ஆனியன் ரைத்தா அல்லது இட்லி பொடி செமையாக இருக்கும்)

*ராகி க்றிஸ்பி

இரண்டு வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லிசாக நறுக்கிக் கொள்ளவும். இரண்டு கேரட்டை நன்கு துருவிக் கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் வெங்காயம் ,கேரட் ,100 கிராம் ராகி மாவு, சோள மாவு, பொட்டுக்கடலை மாவு தலா1 டேபிள் ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது சிறிதளவு, தனி மிளகாய் தூள் ஒரு டீஸ்பூன், பெருஞ்சீரகம் தூள் கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை மல்லித்தழை சிறிதளவு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து, தண்ணீர் சிறிது தெளித்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும் இதை காய்ந்த எண்ணெயில் கிள்ளிப் போட்டு மொறுமொறுப்பாக பொரித்து எடுக்க சுவையான “ராகிகிரிஸ்பி “ரெடி. இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது சோற்றுக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

ராகி அடை

*ஹாட் ஆம்லெட்

ராகி மாவு கால் கப், கடலை மாவு ஒரு கப், சிட்டிகை மஞ்சள் தூள் உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலக்கவும். (சிறுகீரை ,அரைகீரை ,முளைக்கீரை எந்தக் கீரையாக இருந்தாலும் பரவாயில்லை) வெங்காயம் ஒன்று இஞ்சி சிறு துண்டு பச்சை மிளகாய் இரண்டு மற்றும் கீரை ஆகியவற்றை நன்கு சுத்தம் செய்து மிகவும் பொடியாக நறுக்கவும்.

இதனுடன் ராகி மாவு கலவையை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து சிறிது எண்ணெய் தடவி இந்த மாவை சின்ன சின்ன ஆம்லெட்டுகளாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு மிதமான தீயில் வேகவிட்டு திருப்பி போட்டு எடுத்து சூடாக பரிமாறவும். (தொட்டுக்கொள்ள எந்த வகை சட்னியாக இருந்தாலும் (வேர்க்கடலை சட்னி ஆஹா ) அருமை) எத்தனை சாப்பிட்டோம் என்ற கணக்கே இல்லாமல் சாப்பிட தூண்டும் இந்த ‘ஹாட் ஆம்லெட்.

*உடனடி எனர்ஜி தரும் கஞ்சி.
கேழ்வரகு மாவை தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கைகளால் கரைத்துக் கொள்ளவும்.

அடி கனமான பாத்திரத்தில் நான்கு டம்ளர் நீர் வைத்து கொதித்ததும் கரைத்த கேழ்வரகு மாவை கொட்டி (சிட்டுகை உப்பை சேர்த்துக் கொள்ளவும்) நன்கு கிளறவும்.

ராகி

இரண்டு மூன்று நிமிடத்தில் வெந்துவிடும். மாவு வெந்ததும் ஒரு டம்ளர் பால் விட்டு வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து இரண்டு டம்ளர் குடிக்க உடனடி எனர்ஜி கிடைக்கும்.

அல்லது நன்கு சிலுப்பிய மோர் மற்றும் உப்புசேர்த்தும் குடிக்கலாம் மிகவும் சுவையாக இருக்கும். குடித்த உடனேயே ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும் பாருங்கள் அது வேற லெவலில் இருக்கும். விளம்பரத்தில் வரும் அம்மாக்களைப் போல  கணவர் மற்றும் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு, சோர்வாக இருக்கும் தருணத்தில் இப்படி இரண்டு டம்ளர் எடுத்துக் கொள்ள, நாள் முழுவதும் வேலை செய்ய எனர்ஜி கிடைக்கும். விளம்பர அம்மாக்களைப் போல் சிரித்துக் கொண்டே மகிழ்ச்சியாக வேலையைத் தொடரலாம்.

இனி வாரத்திற்கு இரண்டு நாட்களாவது கேழ்வரகு சமைத்து சாப்பிடுங்கள்! உடல் நலத்தை காத்திடுங்கள்!!

என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.