இந்தியாவில் தன்னை கடித்த நாகப்பாம்புடன் இளைஞர் மருத்துவமனைக்கு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இளைஞரை கடித்த பாம்பு
ஒடிசா மாநிலத்தின் ராங்கி கிராமத்தை சேர்ந்தவர் குரு முண்டா (30).
இவர் கோழி பண்ணையில் பணிபுரியும் நிலையில் அவரை நாகப்பாம்பு ஒன்று கடித்தது.
இதையடுத்து வலியால் குரு அலறினார், பின்னர் கிராம மக்கள் அவரை மருத்துவமனைக்கு தூக்கி செல்ல தயாரானார்கள்.
அதற்கு முன்னர் குரு மற்றும் உள்ளூர்வாசிகள் அந்த நாகப்பாம்பை கண்டுபிடித்து சாக்கு மூட்டைக்குள் போட்டு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.
sambadenglish
காட்டுக்குள் விடப்பட்ட பாம்பு
அங்கு உடனடியாக குருவை சிகிச்சைக்காக மருத்துவர்கள் அழைத்துச் சென்ற நிலையில், சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் அங்கு வந்து பாம்பை பிடித்த நிலையில் அது அருகில் உள்ள காட்டுக்குள் விடப்பட்டது.