பெங்களூரு: வரதட்சணை கொடுமை வழக்கில் சிக்கிய கன்னட நடிகை அபிநயா, அவரது தாய், அவரது சகோதரர் ஆகியோருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னட நடிகை அபிநயாவின் மூத்த சகோதரர் ஸ்ரீனிவாஸ் என்பவருக்கும் அவரது மனைவி லட்சுமி தேவி என்பவருக்கும் குடும்ப பிரச்னை இருந்தது. அதையடுத்து லட்சுமி தேவி கொடுத்த வரதட்சணை கொடுமை புகாரின் அடிப்படையில் ஸ்ரீனிவாஸ், அவரது பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்கள் மீது கடந்த 2002ம் ஆண்டு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் நடிகை அபிநயா, அவரது தாய் ஜெயம்மா, இளைய சகோதரர் செல்வராஜூ, தந்தை ராமகிருஷ்ணன், சகோதரர் ஸ்ரீனிவாஸ் ஆகிய 5 ேபரும் குற்றவாளிகள் என்று விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அபிநயா மற்றும் இருவருக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. கீழமை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கடந்த 2010ல் கர்நாடகா உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது.
இதற்கிடையே இந்த வழக்கில் தண்டனை பெற்ற அபிநயாவின் தந்தை ராமகிருஷ்ணா மற்றும் சகோதரர் ஸ்ரீநிவாஸ் ஆகியோர் கடந்த ஆண்டு இறந்துவிட்டனர். தலைமறைவாக உள்ள அபிநயா, அவரது தாய் ஜெயம்மா, சகோதரர் செல்வராஜு ஆகியோருக்கு எதிராக கடந்த மாதம் உள்ளூர் நீதிமன்றம் கைது வா ரண்ட் பிறப்பித்தது. அதன் தொடர்ச்சியாக மேற்கண்ட மூன்று பேரும் வெளிநாடு தப்பிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக, அவர்களுக்கு எதிராக போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இந்த நோட்டீசின் விபரங்கள் அனைத்து விமான நிலையங்களுக்கும், புலனாய்வு அமைப்புகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டதாக ேபாலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.