திருவெறும்பூர்: திருச்சியில், புதுக்கோட்டையில் உள்ள நெல்கொள்முதல் நிலையங்களில் ஒன்றிய குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட நெலை கொள்முதல் செய்வதில் ஈரப்பதத்தை தளர்வு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதையேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசை ஆய்வு செய்ய வலியுறுத்தினார்.
இதையேற்று, தமிழ்நாட்டிற்கு வந்த ஒன்றிய குழுவினர், கடந்த 8ம்தேதி நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறையிலும், நேற்றுமுன்தினம் திருவாரூர் மற்றும் தஞ்சாவூரிலும் ஆய்வு செய்தனர். நேற்று 3வது நாளாக ஒன்றிய குழுவினர், திருச்சி அடுத்த திருவெறும்பூர் அருகே சூரியூரில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்களின் ஈரப்பதம் குறித்து நேரில் ஆய்வு செய்து மாதிரிகளை எடுத்து சென்றனர்.
தொடர்ந்து மணப்பாறை ஒன்றியத்திற்கு உட்பட்ட கே.பெரியபட்டி ஊராட்சி தெற்கு சீர்பட்டி உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மற்றும் வைய்யம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட நல்லப்பிள்ளை பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொட்டப்பட்டிருந்த நெல்மணிகளின் ஈரப்பதத்தை ஆய்வுகளை ஆய்வு செய்தனர். இதேபோல், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா ரெகுநாதபுரம் கிராமம், கந்தர்வகோட்டை அருகே உள்ள கல்லாக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் ஒன்றிய குழுவினர் ஆய்வு செய்தனர்.
நட்பின் இலக்கணத்தை நாட்டுக்கு கற்று கொடுத்தவர் பிரதமர்: மதுரை: மதுரை எம்பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘காந்தி, நேரு, எம்ஜிஆர், என்டிஆர், கலைஞர் ஆகியோரைப்பற்றி இரு அவைகளிலும் கேள்வி எழவில்லை. ஆனால் அவர்களைப்பற்றி பிரதமர் பேசினார். எல்லோரும் எழுப்பியது அதானியைப் பற்றிய கேள்வி. ஆனால் அதற்கு அவர் வாய் திறக்கவில்லை. நட்பின் இலக்கணத்தை நாட்டுக்குக் கற்றுக்கொடுத்தார் பிரதமர்’ என்று தெரிவித்துள்ளார்.