ஜனநாயகத்தின் தாய்நாடு!
இந்தியா, ஜனநாயகத்தின் தாய்நாடு. பன்முகத்தன்மை மற்றும் பாரம்பரியத்தை கொண்டுள்ள நாடு என்பதை வலியுறுத்த, வெளிநாடுகளில் பல்வேறு நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன.
ஜெய்சங்கர்
வெளியுறவுத் துறை அமைச்சர், பா.ஜ.,
தாடி வளர்த்தால் பிரதமர் அல்ல!
தாடி வளர்ப்பதால் ஒருவர் பிரதமர் ஆகிவிட முடியாது. குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதே கவுதம் அதானி மிகப் பெரிய தொழிலதிபராக வளர்ந்துவிட்டார்.
சுதிர் முன்கன்திவார்
மஹாராஷ்டிரா மாநில அமைச்சர், பா.ஜ.,
மக்கள் என்ன செய்வர்?
ஆயுள் காப்பீடு, வங்கிகள், தபால் நிலையங்களில் பொது மக்கள் சேமிக்கும் பணத்தை, பெரு நிறுவனங்களுக்கு அரசு கடனாக அளிக்கிறது. திடீரென ஒரு நாள் இவற்றை அரசு மூடிவிட்டால் அப்பாவி மக்கள் என்ன செய்வர்?
மம்தா பானர்ஜி
மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement