‘மாட்டை கட்டிப்பிடிங்க’- பாஜகவின் அரசியல்; சிவ சேனா தாக்கு!

உலகம் முழுவதும் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி அன்று காதலர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அன்றைய நாளில் பசுவை கட்டிபிடிங்க என இந்திய விலங்குகள் நல வாரியம் அறிவுறுத்தி இருந்தது.

இது குறித்து இந்திய விலங்குகள் நல வாரியம் வெளியிட்ட அறிக்கையில்; இந்திய கலாச்சாரத்தின் முதுகெலும்பாக பசு இருந்து வருவது நாம் எல்லாருக்கும் தெரிந்த ஒன்றே. தாயின் குணநலன்கள் இருப்பதால் பசுவை நாம், ‘காமதேனு’ மற்றும் ‘கோமாதா’ என அழைத்து வந்தோம்.

மேற்கத்திய கலாச்சாரத்தின் வருகையால், நம் பழமையை மறந்து செயல்பட்டு வருகிறோம். இதனை தவிர்க்கவும், நாம் அனைவரும் மகிழிச்சியாக வாழ்வில் வாழ பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று அனைவரும் மாட்டை கட்டி பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. இதன் மூலம் நேர்மறையான எண்ணங்கள் கிடைக்கும் எனவும் கூறியது.

“காங்கிரஸ் வெறுப்பு அரசியல் செய்கிறது”- பிரதமர் மோடி தாக்கு!

இந்திய விலங்குகள் நல வாரியத்தின் இந்த அறிவிப்பிற்கு பல இந்து அமைப்புகள் ஆதரவு தெரிவித்தாலும், அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், சிவ சேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னா, இது குறித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மோடி- அதானி உறவு; கார்கே, நிர்மலா இடையே வெடித்த வாக்குவாதம்!

அதில் குறிப்பிட்டு இருப்பதாவது; பசு மற்றும் ராமர் கோவில் போன்றவற்றை வைத்து பாஜக அரசியல் செய்து வருகிறது. மக்களை தவறான பாதையில் திசை திருப்பி வரப்போகின்ற தேர்தலில் குறிப்பாக இந்துக்களின் வாக்கு வங்கிகளை பெறுவதற்காக தான் இதை பாஜக செய்து வருகின்றனர்.

சில மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. மேலும், 2024 ஆம் ஆண்டில் லோக் சபா தேர்தல் வரவுள்ளது. மக்களிடம் எடுத்து சொல்ல மோடி அரசாங்கத்திடம் வேறு எந்த நல்ல விஷயங்களும் இல்லை. எந்த முன்னேற்றத்தையும் மக்களுக்காக இந்த ஆளும் பாஜக அரசு செய்யவில்லை. அதனால் இது போன்ற மதம் சார்த்த செயல்களில் கவனம் செலுத்தி வருகின்றனர் என குற்றம் சாட்டியுள்ளது.

மேலும், அதானி விவகாரம் குறித்தும் ‘சாம்னா’ கடுமையாக விமர்சித்து உள்ளது. அதானி குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் ஒரு வார்த்தை கூட கூறவில்லை. எதிரிக்கட்சிகளின் கேள்விகளை மோடி ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவோல்லை. நாட்டு மக்கள் அனைவரும் அதானியின் ஊழல் குறித்து தெரிந்து கொள்ள நினைக்கின்றனர். ஆனால், இந்த பாஜக அரசு மாடுகளை பற்றி பேசியுள்ளது.

இந்திய பங்கு சந்தைகளில் அதானி ஒரு பெரிய புள்ளியாக திகழ்கிறார். அதே நேரத்தில் அதானி, மோடிக்கு மிகவும் அடிபணிந்தவராக இருக்கிறார். பிரதமர் மோடியும், அதானியை எந்த இடத்திலும் விட்டு கொடுக்காமல் காப்பற்றி வருவதாக ‘சாம்னா’ சாடியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.