AR Rahman: ஒரு கான்சர்டுக்கு தமிழக அரசு அனுமதி கிடைக்க 6 மாசமாகுது: ஏ.ஆர். ரஹ்மான்

சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்துவது குறித்து ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்தது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

ஏ.ஆர். ரஹ்மான்இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் படங்களில் பிசியாக இருந்தாலும் பல்வேறு இடங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில் தான் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வரும் மார்ச் மாதம் 7ம் தேதி ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. இது தொடர்பாக ட்வீட் செய்தார் ரஹ்மான்.
புனே
சென்னைஏ.ஆர். ரஹ்மானின் ட்வீட்டை பார்த்த ரசிகை ஒருவரோ, சார், சென்னை என்று ஒரு நகரம் இருக்கிறது. உங்களுக்கு நினைவிருக்கிறதா என கேள்வி எழுப்பினார். ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் இசைப்புயலின் கண்களில் அந்த கமெண்ட் பட அவரோ, பெர்மிஷன்ஸ், பெர்மிஷன்ஸ், பெர்மிஷன்ஸ், 6 மாத கால ப்ராசஸ் என தெரிவித்துள்ளார்.
ஆஸ்கர் நாயகன்ஆஸ்கர் நாயகன் சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடத்த வேண்டுமானால் 6 மாத காலம் அலைக்கழிக்கப்படுகிறார் என்பதை நம்ப முடியவில்லை. நம் ஊர் பெருமையை நாம் தானே உலகிற்கு சொல்ல வேண்டும். அப்படி இருக்கும்போது ரஹ்மானின் இசை நிகழ்ச்சிக்கு அவரை அலையவிடாமல் உடனே அனுமதி வழங்க வேண்டாமா. உதய்ணா தயவு செய்து இந்த விஷயத்தை கவனித்து இசைப்புயலுக்கு எளிதில் அனுமதி கிடைக்கச் செய்யுங்கள் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அனுமதிஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் படத்திற்கு இசைப்புயல் இசையமைத்துள்ளாரே. அப்படி இருந்துமா அவரின் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க காலதாமதம் செய்கிறார்கள். நம் முதல்வர் மு.க. ஸ்டாலின் அப்படி எல்லாம் செய்ய மாட்டாரே. எதுவாக இருந்தாலும் ஒரு திறமைசாலியை மனம் வருந்தச் செய்யக் கூடாது. அவர் சென்னையில் நிகழ்ச்சி நடத்த உடனே அனுமதி அளிக்க வேண்டும் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ரசிகர்கள்ரஹ்மான் சார், சென்னையை விடுங்க எங்க மதுரை பக்கம் வந்து இசை நிகழ்ச்சி நடத்துங்கள். உங்களின் பாடல்களை நேரில் கேட்க ஆவலாக இருக்கிறோம். ப்ளீஸ், எங்க ஊருக்கு வாங்க என பாசத்திற்கு பெயர் போன மதுரைக்கார ரசிகர்கள் ஏ.ஆர். ரஹ்மானிடம் சமூக வலைதளத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காத்திருப்புசென்னையில் ரஹ்மான் நிகழ்ச்சி நடத்த ஆறு மாதம் காத்திருக்க வேண்டுமா?. அப்படி என்றால் அவர் தற்போது அனுமதி கேட்டு விண்ணப்பித்தால் ஆறு மாதம் கழித்து தான் அனுமதி கிடைக்குமா?. அதுவரை நாங்கள் காத்திருக்கணுமா?. உதய்ணா ப்ளீஸ் அனுமதி வாங்கிக் கொடுங்கள். நம்ம இசைப்புயல் அவர். அவரை நாம் தானே கொண்டாட வேண்டும் என்கிறார்கள் ரசிகர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.