Leo, Trisha: அடப்பாவமே, இதுக்கு தான் த்ரிஷா சொன்னதை கேட்டு விஜய் அப்படி சிரித்தாரா!

Lokesh Kanagaraj: த்ரிஷா அப்படி என்ன சொன்னார் என விஜய் வெட்கப்பட்டு சிரித்தார் என்பதை கண்டுபிடித்துவிட்டோமே என்கிறார்கள் நெட்டிசன்கள்.

லியோலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், ப்ரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் லியோ. சென்னையை அடுத்து காஷ்மீரில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் வெளியான லியோ பட பூஜை புகைப்படங்களை பார்த்த அனைவருக்கும் த்ரிஷா ஏதோ சொல்ல அதை கேட்டு விஜய் சிரித்தது தான் மிகவும் பிடித்துவிட்டது.

த்ரிஷாTrisha, Leo: ப்ளீஸ், விஜய்யை பற்றிய அந்த உண்மையை சொல்லிடுங்க த்ரிஷாத்ரிஷா என்ன சொல்லியிருப்பார் என ரசிகர்கள் யோசித்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்நிலையில் அந்த ரகசியத்தை நீங்களே சொல்லிடுங்களேன் என த்ரிஷாவிடம் ரசிகர்கள் கேட்டுள்ளனர். இதற்கிடையே த்ரிஷா சொன்னதை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்கள் போட்ட மீம் தான் அல்டிமேட்.

டெத் சீன்சார் படத்தில் நமக்கு லவ் சீன்ஸ்லாம் இருக்கும்ல என விஜய்யிடம் த்ரிஷா கேட்டாராம். அதற்கு விஜய் சிரித்ததை பார்த்த த்ரிஷா, ஏன் சார் சிரிக்கிறீர்கள் என கேட்க தளபதி சூப்பர் பதில் அளித்தாராம். அதாவது, இல்ல லோகி என் கிட்ட உன் டெத் சீனை சொன்னான். அது நியாபகம் வந்துச்சு என சிரிப்பதாக மீம்ஸ் போட்டுள்ளனர்.
கலாய்மீம்ஸ் கிரியேட்டர்கள் ஜாலியாக அப்படி ஒரு விஷயத்தை சொன்னாலும் அது அருமையாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். லோகேஷ் கனராஜ் படத்தில் ஹீரோயினுக்கு வேலையே இருக்காது. முதல் காட்சியிலேயே த்ரிஷாவின் கழுத்தை அறுத்து கொலை செய்வது போன்று காட்டி, அதற்காக விஜய் பழிவாங்குவது தான் கதை என்று இருக்கப் போகிறது என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
ரசிகர்கள்விஜய், த்ரிஷா சேர்ந்து ஸ்டெப்ஸ் போடணும், ரொமான்ஸ் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆனால் லோகியோ ஆரம்பத்திலேயே த்ரிஷா கதாபாத்திரத்தை போட்டுத்தள்ளப் போகிறார் என்றே அடிக்கடி தோன்றுகிறது. பாவம் த்ரிஷா, 14 ஆண்டுகள் கழித்து விஜய்யுடன் சேர்ந்து நடிக்கிறார். அவருக்கு இப்படியா நடக்கணும் என்கிறார்கள் ரசிகர்கள்.
ப்ரியா ஆனந்த்லியோவில் த்ரிஷாவுக்கே வேலை இருக்காது. இதில் ப்ரியா ஆனந்த் எதற்கு என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். த்ரிஷாவை விட ஏஜென்ட் டீனாவின் கதாபாத்திரம் தான் மாஸாக இருக்கப் போகிறது என ரசிகர்கள் நம்புகிறார்கள். இதற்கிடையே லியோ படத்தில் இருந்து த்ரிஷா விலகிவிட்டதாக தகவல் வெளியாகி அடங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. த்ரிஷாவின் பழைய புகைப்படம் ஒன்று தற்போது வைரலானதால் அந்த பேச்சு கிளம்பியது. அதற்கு த்ரிஷா அவர் ஸ்டைலில் பதில் அளித்தார்.

​Leo, Trisha: ஒரு வீடியோ, ஒரு ரீட்வீட்: லியோ சர்ச்சையை முடித்து வைத்த த்ரிஷா

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.