அபுதாபி ஓபன் டென்னிஸ்: பெலின்டா பென்சிச் அரைஇறுதிக்கு முன்னேற்றம்

அபுதாபி,

அபுதாபி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ஒலிம்பிக் சாம்பியனான பெலின்டா பென்சிச் (சுவிட்சர்லாந்து) 7-6 (7-5), 6-2 என்ற நேர் செட்டில் ஷெல்பி ரோஜர்சை (அமெரிக்கா) தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு கால்இறுதியில் பிரேசிலின் ஹடட் மையா 3-6, 6-3, 6-2 என்ற நேர் செட்டில் விம்பிள்டன் சாம்பியன் எலினா ரைபகினாவுக்கு (கஜகஸ்தான்) அதிர்ச்சி அளித்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.