அலாஸ்கா மீது பறந்த மர்ம "பொருள்".. சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா.. மீண்டும் பரபரப்பு!

அலாஸ்கா: அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் வட்டமிட்ட மர்மப் பொருளை, அமெரிக்க விமானப்படை விமானம் சுட்டு வீழ்த்தியுள்ளது.

அதிபர் ஜோ பிடன் உத்தரவைத் தொடர்ந்து அந்த மர்மப் பொருளை அமெரிக்க விமானப்படை விமானம் துரத்திச் சென்று சுட்டு வீழ்த்தியது. சிதறிய பாகங்களை சேகரிக்கும் பணி தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், சிறிய கார் வடிவிலான மர்மப் பொருள் அலாஸ்கா மீது பறப்பதாக தகவல் கிடைத்தது. அது பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் அதை சுட்டு வீழ்த்த அதிபர் ஜோ பிடன் உத்தரவிட்டார். இதையடுத்து அதை விமானப்படை விமானம் துரத்திச் சென்று சுட்டு வீழ்த்தியது.

இஸ்ரேல் உறவைத் துண்டித்தார் பார்சிலோனா மேயர்.. பாலஸ்தீனத்தில் மனித உரிமை மீறல் என புகார்

அந்த மர்மப் பொருள் என்ன என்று தெரியவில்லை. சிறிய கார் வடிவில் அது இருந்தது. அதை ஏவியது யார், எதற்காக அலாஸ்கா மீது வட்டமடித்தது என்று தெரியவில்லை. அதுகுறித்து ஆராயப்பட்டு வருகிறது என்றார் அவர்.

சமீபத்தில்தான் சீனா அனுப்பிய பிரமாண்ட பலூனை அமெரிக்க விமானப்படை கலிபோர்னியாவில் சுட்டு வீழ்த்தியது என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் இன்னொரு மர்மப் பொருள் அமெரிக்க வான் எல்லையில் ஊடுறுவியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘பிரதமராக இம்ரான் கான் தொடர்ந்திருந்தால்..’- முன்னாள் ராணுவ தளபதி பரபரப்பு.!

அலாஸ்காவின் வட கிழக்கு பகுதியில் பூமியிலிருந்து 40,000 அடி உயரத்தில் இந்த மர்மப் பொருள் பறந்து கொண்டிருந்தது. மணிக்கு 64 கிலோமீட்டர் வேகத்தில் அது பறந்தது. அலாஸ்கா கடலிலிருந்து வட முனை நோக்கி அது பறந்து கொண்டிருந்தபோது சுட்டு வீழ்த்தப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.