உக்ரைன் மீதான அத்துமீறிய போர் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1140 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக உக்ரைன் ஆயுதப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொன்று குவித்த உக்ரைன்
ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் தாக்குதல் இன்னும் சில நாட்களில் ஓராண்டை கடக்க இருக்கும் நிலையில், புதிய தாக்குதலுக்காக உக்ரைன் எல்லை பகுதிகளில் ரஷ்யா கிட்டத்தட்ட 5,00,000 ராணுவ வீரர்களை சமீபத்தில் மீண்டும் குவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் ரஷ்யாவை எதிர்த்து தொடர்ந்து போராட கூடுதலான ஆயுதங்கள் வேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மேற்கத்திய நாடுகளிடம் முன்வைத்து வருகிறார்.
“This is what you’ll get
This is what you’ll get
This is what you’ll get
When you mess with us”
RadioheadTotal combat losses of the enemy from Feb 24 to Feb 11: pic.twitter.com/CMdtbrx6vA
— Defense of Ukraine (@DefenceU) February 11, 2023
இந்நிலையில் உக்ரைன் மீதான அத்துமீறிய போர் தாக்குதல் தொடங்கிய நாள் முதல் இதுவரை சுமார் 1,36,880 ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக உக்ரைனிய ஆயுதப் படை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைன் நடத்திய எதிர்ப்பு தாக்குதலில் மட்டும் சுமார் 1140 ரஷ்ய வீரர் கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
போர் ஆயுதங்கள்
அத்துடன் நேற்றைய தினம் ரஷ்யா கூடுதலாக 9 டாங்கிகள், 3 ஆயுத கவச வாகனங்கள், 19 ஏவுகணை அமைப்புகள், 61 கப்பல் ஏவுகணை, 27 தந்திரோபாய-நிலை ஆளில்லா வான்வழி வாகனங்கள்(ட்ரோன்கள்) மற்றும் 8 டிரக்குகள் மற்றும் டேங்கர்கள் ஆகியவற்றை இழந்து இருப்பதாக உக்ரைனிய ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.
AFP VIA GETTY IMAGES