சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் 42 பணிகளை மேற்கொள்ள ரூ.98.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மாநகராட்சியில் 11 பூங்காக்கள், 2 விளையாட்டுத் திடல்கள், 10 கடற்பாசி பூங்காக்கள், 2 மயானபூமிகள், 16 பள்ளிக் கூட்டடங்கள் மற்றும் புரதான சின்னமான விக்டோரியா பொதுக் கூடத்தை பாதுகாத்து புத்துயிர் அளித்து புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளுதல் என 42 திட்டப்பணிகளுக்கு ரூ.98.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி,
சிறந்த சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில், கூழாங்கற்களுடன் கூடிய 8 வடிவிலான பாதை, யோகா செய்யுமிடம், அமரும் இருக்கைகள், கிரில் மற்றும் புதுமையான ஓவியங்களுடன் கூடிய சுவர், கழிப்பறைகளுடன் கூடிய பாதுகாப்பு அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கொண்டுள்ளதாக இந்த பூங்காக்கள் அமைய உள்ளது.
மேலும், கால்பந்து, பூப்பந்து, கைப்பந்து மைதானங்கள் உள்ளிட்ட விளையாட்டு வசதிகளுடன் விளையாட்டுத் திடல்கள் அமைய உள்ளது.
செயற்கை குளம், மழைத்தோட்டங்களுடன் கடற்பாசி பூங்காக்கள் அமைய உள்ளது.
எரிபொருள் தகனத்தை எல்.பி.ஜி தகனமாக அமைத்தல்,
நவீன வசதிகளுடன் சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிப்பு எற்பாடுகள், நினைவுக்கூடங்கள்,
தியான அறைகள், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள்,
சிறந்த கற்றல் சூழல் மேம்படுத்தப்பட்ட வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் பள்ளிக் கட்டடங்கள் அமைய உள்ளது.